Skip to main content

கனவுகளும் வயதும்..

மனமும்..




நெடுந்தூக்கத்தில் வரும் கனவுகள் குறித்து எனக்கு நிறைய ஐயங்கள் உண்டு. எங்கோ ஓடிக்கொண்டிருப்போம், யாரோ துரத்துவார்கள், அவர்களின் முகங்கள் தெரியும், இவனா என்று வினா வரும். ஒரு வீட்டுக்குள் ஓடுவோம், அது மிகவும் தெரிந்த மாதிரியான அறைகளைக் கொண்டிருக்கும். அதன் ஒரிடத்தில் அம்ர்ந்து ஒளிந்துக்கொள்வோம். அருகே ஒரு பாம்பு தலை நீட்டி படம் எடுக்கும். பயந்துப் போய் மறுபடியும் ஓடுவோம். கனவு தீர்ந்து நிஜம் உதற வைக்கும். 

அதில் வருவது நாம் என்பது, நாம் எதிரிகளை எதிர்க்கொள்வதில் இருந்து புரியமுடியும். ஆனால் அந்த 'நாம்' என்பதற்கு முகம் இருக்காது. வயது இருக்காது, காட்சிக்குத் தேவையில்லையெனில் உடைகளும் புலப்படாது. அப்போது அந்த முகத்தை ஏன் நாம் நமது முகமாக கொள்கிறோம்? முகமே தெரியாத போது, கனவில் நடப்பதை நமக்கானதாய் எதற்கு எடுத்துக் கொள்கிறோம்? 

ஜேன் மில்லர் சொன்னது போல, 'I wonder how many of us are old in our dreams'.. வயதும் முகமும் அற்ற கனவுகளை எண்ணி எண்ணி துயருருவதை என்னவென்பது..

என்றாவது ஒரு நாள் கனவில் வந்த இடத்தைக் கண்ணில் கண்டு தொலைப்போம். இதை எங்கேயோ பார்த்தமாதிரி இருக்கே என்று குடைவோம் மூளையை. சரிவர பிடிபடாது. இப்படி கனவு நிகழ்ந்த இடமும் வயதும் முகமும் கலைந்து போகும் பட்சத்தில் எதற்காக கனவுகளைத் தூக்கிச் சுமக்கிறோம்?

ஒன்றிலிருந்து மூன்று வயது வரை வரும் கனவுகள் night terrors எனப்படும் வகையைச் சார்ந்தவை. நடு இரவுக்கு மேல் குழந்தைகள் எழுந்துக்கொண்டு அழும். தூக்கச் சிக்கும் சேர்ந்துக்கொள்ள ஒரு மணி துளிகளாவது பயத்துடன் கத்திக் கொண்டிருக்கும். மெதுவாய் பேசி பாட்டுப்பாடி அவர்களை ஆற்றுப்படுத்தித் தூங்க வைக்கவேண்டும். 

பள்ளிப் பருவங்களில் (5 - 8 வயது வரை) தன் வயதையொத்த சக பிள்ளைகளிடம் காட்டும் அன்பு, வெறுப்பு, புரிதலின்மை, பெற்றோர்களின் வாக்குவாதம், சண்டை, விபத்து, வீட்டின் இருட்டு மூலைகள், பேய், பிசாசு பயம் போன்றவை அதிகமிருக்கும். அவர்கள் பள்ளி விட்டு வந்தபிறகு யார் யாருடன் என்ன பேச்சு பேசினார்கள் என்பதை நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இரவில் படுக்கும் அறையின் கதவிலோ கட்டிலின் தலைமாட்டிலோ, 'நல்ல கனவுகளுக்கு மட்டுமே இங்கே அனுமதி' என்று அவர்களையே எழுதச்சொல்லி ஒரு போர்டு செய்து மாட்டிவிட வேண்டும். இது அவர்களின் பயத்தைப் போக்கும். அம்மா இங்கதான் படுத்திருக்கேன், அப்பா இதோ படுத்திருக்காங்க என்று அவர்களுக்கு உதவிக்கு ஓடிவருவாங்க என்னும் நம்பிக்கையை இரவில் படுக்கப் போகும்முன் கொடுங்க.

கனவுகளைப் பற்றிக் காலை எழுந்ததும் நினைவூட்டாதீர்கள். பகல் முழுமையும் அது அவர்களைத் தொந்தரவு செய்யும். கேஷுவலாக அதைக் கையாளுங்க. 



பதின்பருவத்தில் வரும் கனவுகள் அவனை/அவளை முழு மனிதத்துவம் வாய்ந்த மனிதர்களாய் மாற்றும் குணம் வாய்ந்தவை. திரில்லர் கதைகள் படிப்பது, திரில்லர் படங்கள் பார்ப்பது போன்றவை அவர்களின் மனித மனதின் மிருகத்தனமான பக்கத்தைச் சீண்டிப் பார்ப்பவை. கொலை, பாலியல் வன்முறைகள் போன்றவற்றைப் பற்றி அவர்கள் எவ்வாறு யோசிக்கிறார்கள் என்பதைப் பெற்றோர்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும். 



சனி ஞாயிறுகளில் ஒரு Questionnaire - yes or no குறிப்பது போன்ற வினாதாள் ஒன்றைக் கையில் கொடுத்து அவர்களின் சமூக புரிதலைத் தெரிந்துக்கொள்ள வேண்டும். பக்கத்து தெருவில் நடந்த அல்லது பேப்பரில் படித்த, நியூசில் கேட்ட கொலை, பாலியல் வன்முறை, திருட்டு போன்றவைக் குறித்தக் கருத்துகளைக் கேட்டு அறியலாம். அல்லது எழுதச்சொல்லலாம். இது சமூகம் குறித்த அவர்களின் பதட்டத்தைக் குறைக்கும். கனவுகளை சாதாரணமாக்கும். 

பெரியவர்கள் ஆனபிறகு வரும் கனவுகள் வாழ்வின் குழப்பமான மனநிலை, பிரச்சனைகள், மன அழுத்தங்கள், பாலியல் போதாமை, பொருளாதார நிலை போன்றவற்றின் தாக்கத்தை அதிகம் கொண்டிருக்கும். எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு இருப்பதாய் நாம் நம்பவேண்டும். நம் மனதையும் நம்ப வைக்க வேண்டும். முட்டுச்சந்தில் போய் நிற்பதாய் ஆன கனவுகளுக்கு இதுதான் காரணம். 



ஐம்பது அறுபது தாண்டிய வயதில் வரும் கனவுகள் மிகுந்த கவலையைத் தருவதாய் அமையும். முன்னத்து வாழ்க்கையின் அடிச்சுவடுகள் தொடர்வதாய் தோன்றும். இப்படி வாழ்ந்திருக்கலாமோ இந்த மாதிரி செய்திருக்கலாமோ வாழ்க்கையைத் தொலைத்துவிட்டோமோ பொண்ணை பிள்ளையை முன்னமே கட்டிக் கொடுத்திருக்கனுமோ இன்னமும் சேமித்திருக்கனுமோ போன்ற குற்ற உணர்வு ஊட்டக்கூடிய கேள்விகள் அரிக்கும். இவை கனவுகளில் 'நான்' என்னும் அகந்தை மிக்க மனிதனை போட்டு வதைக்கும். நிகழ் காலத்தின் வயதை முகத்தைச் சுட்டாமல் கனவுகள் வந்து கலங்கடிக்கும். 

இச்சமயங்களில் நம் மனதை ஆற்றுப்படுத்துதல், நாம் நன்றாக சிறப்பாகவே வாழ்ந்தோம் என்ற மனப்பாங்கை வளர்த்தல், சொற்பொழிவுகள் கேட்டல், ஆன்மீகத் தேடல், நடைபயிற்சி, மராத்தன் போன்ற மனிதர்களுடன் புழங்கும் துறைகளில் நுழைதல் போன்றவை கை கொடுக்கும். 



கனவுகளின் எல்லைகள் நம் எண்ணங்கள் தான். அதை எதுவரை, எப்படி கொண்டு செல்கிறோம் என்பதே கனவுகளை சரிபடுத்தும் வழிமுறைகள் ஆகும். 

~ அகிலா.. 
மனநல ஆலோசகர்
எழுத்தாளர்









Comments

  1. கொஞ்சம் பொறுங்க... என்ன கனவு வருகிறது என்று பிறகு சொல்கிறேன்... நன்றி சகோதரி...

    ReplyDelete
    Replies
    1. ஹாஹா.. சொல்லுங்க

      Delete
  2. Replies
    1. ரொம்ப நன்றிங்க

      Delete
  3. ஐம்பது அறுபது தாண்டிய வயதில் வரும் கனவுகள் மிகுந்த கவலையைத் தருவதாய் அமையும்.//

    அப்படியா? அப்படிப் பொதுவாக ஒரு விட முடியுமா?

    எனக்கு எழுபது வயதாகிறது. ஒருமுறைகூட எனக்கு வாழ்க்கையில் தோல்வி அடைந்து விட்டதாக கனவு வந்ததே இல்லை.

    நமக்கு வரும் கனவுகளுக்கும் நம் வாழ்க்கைக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்றுதான் பல ஆங்கில வலைத்தளங்களில் படித்திருக்கிறேன். 

    ReplyDelete
    Replies
    1. எல்லோருக்கும் இத்தகைய கனவுகள் வரும் என்பதில்லை. அதுதான் 'பொதுவாய்' என்பதன் பொருள்.
      தாமதமான திருமணங்கள், அதனால் தாமதமாகும் குழந்தை பிறப்பு, நாற்பதுகளில் இருந்து இருக்கும் மன உளைச்சல் stress எல்லாம் தான் இப்போது இருக்கும் ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வரும் கனவுகளுக்குக் காரணம்.

      Delete
  4. ஒரு விட முடியுமா?=கூறி விட முடியுமா?

    ReplyDelete
  5. நல்லதொரு வழிகாட்டல்..... பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    ReplyDelete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்லம் பற்றி

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்று கிழமை கோவை இ

சமகால சிறுகதை இலக்கியத்தில் பெண் கருத்தியல்கள் | கட்டுரை

Feminist Ideologies in Short Story Literature (நவம்பர் 8, 2023 அன்று அரசு கலைக்கல்லூரி, சித்தூர், கேரளாவில்  நடைபெற்ற கருத்தரங்கில் நிகழ்த்திய உரை) அண்மை தமிழிலக்கியம்: படைப்பும் வாசிப்பும் சமகால சிறுகதை இலக்கியத்தில் பெண் கருத்தியல்கள் ஆய்வுரை: து அகிலா  எழுத்தாளர், மனநல ஆலோசகர் கோயம்புத்தூர் சிறுகதை இலக்கியமும் பெண்ணியக் கோட்பாடும் காலம்காலமாய் சொல்லப்பட்டு வரும் கதை இலக்கியம், புனைவுலகை நம் முன் கொண்டுவரும் ஒன்று. கதை சொல்பவர்களால் நெடுங்கதைகளாகதான் அவை சொல்லப்பட்டு வந்தன. பெருங்காதைகள் எல்லாம் செய்யுள்களாக சங்க இலக்கியத்தில் மலர்ந்துள்ளன. படிநிலை வளர்ச்சியாக கதை மரபானது, நாட்டாரியல் வாய்மொழி கதைகளையும், பஞ்சதந்திரக் கதைகளையும், விக்கிரமாதித்தன் கதைகளையும், ஈசாப் நீதிக்கதைகளையும் நம்முன் வைத்தபடியே வளர்ந்து வந்தது எனலாம். சிறுகதை இலக்கியம் வாய்மொழி இலக்கியத்திலிருந்து எழுத்துமொழிக்கும் அச்சுமொழிக்கும் வந்த பிறகுதான் அவற்றின் வாசிப்புத்தளம் அதிகப்பட்டுப் போனது.   சிறுகதை இலக்கியத்தில் கருத்தியல் நிலைப்பாடுகள் மானுடவியல், தத்துவம், சமூகவியல், அரசியல், பெண்ணியம், நவீனத்துவம், விளிம்புந