Skip to main content

Posts

Showing posts from October 14, 2012

தூறல்கள்.....

நினைப்பு : உன் நினைப்பு சுமக்கும் இதயம் வலிக்கிறதே சுமக்க முடியாமல்... சற்று இறக்கி வைக்கலாம்தான்... மீண்டும் சுமக்க தொடங்கினால் இன்னும் புதிதாய் பெரிதாய் வலிக்குமே... இறக்கிய இடத்திலேயே விட்டு செல்லலாம் என்றால் சற்று தொலைவு செல்வதற்குள் எங்கு தொலைத்தாலும் சரியாய் வீட்டு வாசலில் நிற்கும் பூனையாய் வந்து ஓட்டிக் கொள்கிறதே.... ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~*** பார்வை.... பாதம் மட்டுமே பதித்து  பார்வை பதிக்காமல் போயிருப்பாயோ  என்கிற பரிதவிப்பில்  என் பார்வை உன் மீதில்லை.... என் பரிதவிப்பு உண்மையென்றால் உன் பார்வை என் மீதில்லை  ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~*** நிஜம்... தாமரை இலையின் மீதிருந்து  விலகி ஓடும் நீரை போல்  நினைவுகளிலிருந்து  நிஜம் பிரித்து ஓடுகிறேன்  ஆயினும்  நிஜம் இன்னும் நரம்புகளில்... ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~***

ஓரக்கண்ணாலே...

நீ என்னை  மறந்திருக்கலாம்  மறந்துவிட்டதுபோல் இருக்கலாம்  மறந்தும் போயிருக்கலாம்.... எதற்கும்  உன் கண்களை  பரிசோதித்து கொள்  உனக்கு துரோகம் செய்கின்றன....

பெண்கள் பலவிதம் 4

மாமியாராய் பெண்கள்... எனக்கு தெரிந்த அந்த பெண்மணி மெத்த படித்தவர். அவர் கணவரின் ரிடையர்மென்ட்டுக்கு பிறகு, தான் பார்த்து வந்த வேலையை உதறிவிட்டார். அவருடைய மகனுக்கு பெண் பார்க்கும் நேரம் வந்த போது, தோழிகளின் வட்டத்தில் அவரின் தத்துவங்கள் மிக பிரபலம்.  'நான் கண்டிப்பாக அவர்களை திருமணம் முடிந்த கையோடு வேறு வீடு பார்த்து வைத்துவிடுவேன். அவர்களின் விஷயங்களில் தலையிடமாட்டேன். '  'கேட்டால் செய்வேன்; கேட்காவிட்டால் செய்யமாட்டேன்' 'பிரசவம் எல்லாம் வந்தால், அவங்க அம்மாவையே  பார்த்துக்கொள்ள சொல்லுவேன். நான் சும்மா பார்த்திட்டு வருவேன்' என்றெல்லாம் கூறிக் கொண்டிருந்தார்.  சரி...திருமணமும் முடிந்து மகனும் மருமகளும் இவர்கள் வீ ட்டிலேயே. கேட்டால்,  'உறவுக்காரர்கள் வந்து செல்வார்கள்...அதுவரைக்கும்' 'அவ M.Phil எக்ஸாமுக்கு இங்கேதான் பக்கம்' 'கொஞ்ச நாள் இருந்து சமையல் கத்துகிட்டும்...'  இப்படி ஏகப்பட்ட காரணங்கள்.  இதற்குள் நிறைய பிரச்னை, சண்டை, சமாதானம் என்று குடும்பம் களைக்கட்டி கொண்டி...

மழையே நில்.....

வீட்டின் முற்றத்தின் மேல் போட்டிருக்கும் கோலத்தின் மேல் நட்டிருக்கும் ரோஜா செடியின் மேல் ஊர்ந்து கொண்டிருக்கும் எறும்புகளின் மேல் அங்கே அமர்ந்திருந்த என்னின் மேலும் சிறு சிறு துளியாய் விழுந்து நான்தான் மழையென பறைசாற்றினாய்...சரி.. நான் எழுதிக்கொண்டிருந்த காகிதத்தின் மேலும் விழுந்து என் கவிதையின் எழுத்துக்களை ஒற்றி எடுத்து எங்கோ கொண்டு சென்றாயே... எங்கு போய் தேடுவேன் என் எழுத்துக்களை... சொல்லிவிட்டு செல்.....