சுடுகிறது..... நுழையும்போதே பார்த்தேன் படுக்க வைக்கபட்டிருந்த அந்த மனிதரை பக்கத்தில் முதுமையிலும் அருமையான மனைவி சற்று கலங்கலான கண்களுடன்.... உறவுகளின் சின்ன சின்ன நலம் விசாரிப்புகள் மெலியதாக மலர்ந்த புன்னகைகள் 'இவங்கதான்' என்ற அறிமுகங்கள் ஹாலை தவிர்த்து உள் அறைகளில் பெண்களின் சிறுகுரல் பேச்சுகள் அதிரடி சிரிப்பு சிரித்த ஒருத்தியை அதட்டும் மற்றொருத்தி 'செத்த வீடு....மெதுவாக' என்று.... மருமகள்களின் 'ஒரு பெருசு ஒழிந்தது' என்னும் மனப்பாங்கு 'பட்டு எடுக்கணுமா அல்லது சாதா காட்டன் போதுமா' 'நாத்தனார்களுக்கும் துணி எடுக்கணுமா' 'திருநெல்வேலி கட்டா? மதுர கட்டா? இல்ல மேலூரா? மேலூருன்னா உருமா எல்லாம் கட்டணும், மேளம் எல்லாம் சொல்லணும்... கொஞ்சம் நேரமாகும்...' 'மதுர கட்டே போதும்...சிக்கிரம் வீட்டுக்கு போணும்' 'தூக்க சாயங்காலமாகும்...சாப்பாடு சொல்லிருங்க நிறைய பேருக்கு சுகர் இருக்கு' 'அவர் மேல சாத்திரத்துக்கு பட்டு வேட்டி குடுங்க' 'சின்ன விளக்கா ஒன்னு