Skip to main content

Posts

Showing posts from June 6, 2021

வலசை

  வலசை ( சிறுகதை ) (அமரர் கல்கி நினைவு விருது பெற்ற சிறுகதை - 2017)  I   கா ல்வாயின் ஓரமாய் அந்த பெரிய வீடு அந்தகார இருளுக்குள் தனித்து அமிழ்ந்து போயிருந்தது. வெளீர் மஞ்சள் வண்ண வாயிற்கதவுகளுடனும் வெள்ளை சுற்றுச்சுவருடனும் சிறு பிறையொளியில் மங்கலாய் காட்சி தந்தது.     அந்த வீட்டின்முன், எங்கு செல்வதென அறியாமல் பருத்தும் நெடிந்தும் நின்ற கரிய நிற யானைக்கு சோர்வு அதிகமிருந்தது. கூட்டம் விட்டு பிரிந்தும் மலையின்று இறங்கியும் இரண்டு நாட்களாகிறது. தான் முன்னின்று நடத்திய தன் பிளிறுகளையும் குட்டிகளையும் காப்பாற்றமுடியாமல் குண்டடிப்பட்டு கூட்டத்திலிருந்து விலக்கப்பட்டு தனித்து நிற்பது அவமானமாய் தோன்ற ஒரு கோபம் கொப்பளித்தது. எல்லாம் இந்த மனிதர்களால் !     உணவும் தண்ணீரும் எங்கிருக்கும் என்று தேடி இத்தனை தொலைவு வந்தாயிற்று. இங்கிருந்துதான் அதன் நாசி தொட்டது, மாவின் வாசனை. கரும்பின் வாசம் போலவே மாவின் வாசத்திற்கும் இக்களிறு அடிமை. மகிழ்வாய் தலையாட்டிக் கொண்டது. வாயிற்கதவு வழி நுழையாமல் கிழக்கு பக்கமாய் அந்த வீட்டைச் சுற்றியது. முன்பக்கம் தவிர மற்ற பக்கங்களில் முள்வேலி இட்டிருந்தார்

மண்சட்டி

மண்சட்டி I  ‘ அம்மா கிளம்புனியா.. ’ ராகவியின் பெரிய குரலுக்கு ‘ வரேன்டி , டீ போட்ட பாத்திரத்த கழுவி வச்சுட்டு வரேன்.. நான்தான செய்யணும்.. ’ என்று  அடுக்களையிலிருந்து முணுமுணுப்பு கேட்டு நின்றுவிட்டது.   அம்மா எப்போவுமே இப்படிதான். எல்லா வேலையும் தானே இழுத்துப்போட்டு செய்வாள். கொஞ்சம் எங்க கூட உட்கார்ந்து பேசும்மா. அட்லீஸ்ட் டிவியாவது பாரும்மா என்றால், முறைத்துவிட்டு நகர்ந்துவிடுவாள். அப்பா இறந்த இந்த ஆறு வருடமாய் அடுக்களை , அவளுக்கும் தம்பிக்குமான ஸ்கூல் , காலேஜ் , அப்பா விட்டுட்டு போன மாட்டுப்பண்ணை இதை தவிர வேறு எங்கும் போவதில்லை. யாராவது விசேஷத்துக்கு என்று ஊரில் கூப்பிட்டால் ‘ நிச்சயம் வரேன் மைனி.. ’ என்பாள். அதோடு சரி , போவதெல்லாம் இல்லை. நெருங்கிய சொந்தம் என்றால் மட்டும் வெளிறிய பட்டு ஒன்னை கட்டி, எப்போவும்போல சின்னதா ஒரு பொட்டு வைத்துக்கொண்டு கிளம்புவாள். ஆனால் ராகவிக்கு மட்டும் இருக்கிற நகையெல்லாம் மாட்டிவிட்டு கூட அழைத்துச் செல்வாள்.   ‘ எனக்கு பிடிக்கலம்மா.. ’ என்ற இவளின் எந்த ஈனக் குரலும் கனகாவின் காதில் ஏறுவதில்லை. ‘ போட்டுக்கடி.. ’ என்று ஒற்றை சொல்லில் முடிப்ப