கரையோடு.... ஒழுகல்கள் அடைக்கப்பட்டு சீராக்கி வலை திணிக்கப்பட்டு மீனவர்களோடு கடலுக்குள் கட்டுமரம்... ஆடும் அலைகளில் அதன் அசைவுகளில் ஆடி வீசும் காற்றில் அதன் போக்கில் ஓடி நம்பியவர்களை பத்திரப்படுத்தி வலையுடன் மீன்களை சுமந்து காரிருள் நெருங்கும் முன் கரை நோக்கி விரைந்து மீன்கள் கடைத்தெருவுக்கும், மீனவன் குடிலுக்கும் செல்ல, கட்டுமரம் மட்டும் கரையில் அலைகளோடு உரசிக்கொண்டு.....