Skip to main content

Posts

Showing posts from March 23, 2014

நிலவென்று பெயரிட்டுக் கொண்டது...

நெடுஞ்சாலையின் வெற்றிடத்தில் காற்று சுவாசிக்கும் இதயமொன்று, நிலவென்று பெயரிட்டுக் கொண்டது... மையலின் இருட்டை உடைத்துப் போட்டு உதிர்ந்த நட்சத்திரங்களை பூக்களாக்கிச் சிரித்தது கூட்டின் குச்சிகளை இரவு விளக்காக்கி சிறகுகளைச் சத்தமிடாதபடி சாந்தப்படுத்தியது கருப்பிட்டு மெழுகிய வானத்தை வெளிச்சமிட்டுவிட்டு விடியலுக்காகக் காத்திருக்கத் தொடங்கியது...

சிந்தனையின் சாரல்...

என் சிந்தனைகளின் சாரலாய் ஒரு வலைப்பூ தொடங்கியிருக்கிறேன். இதில் நம் ஆழ்மனதின் வெளிச்சம் தேடும் முயற்சிகளை அலசத் தொடங்கியிருக்கிறேன் உங்களின் ஆதரவுடன்... http://saaralil.blogspot.in/ இந்த புதிய எனது வலைப்பூவையும் உங்களின் பிடித்த வலைப்பூவாய் இணைத்து மகிழுங்கள்  இந்த என் http://www.ahilas.com வலைப்பூவிலும் ஒரு ' சாரலில் ' என்னும் பக்கமிட்டு அதில் அந்த வலைப்பூவை இணைத்திருக்கிறேன்... தேடலில்  உலகத்தின் எந்த வேறுபாடுகளுக்காகவும் நான் காத்திருக்கவில்லை. நீரின் மேல் இட்ட கோடு உடனே அழியும். அது கண் விட்டு மறையும் நேரம் கூட காத்திருப்பதில்லை. அதுபோல எந்த வேறுபாடுகளுக்காகவும் நான் விழித்துக் கொண்டிருக்கவில்லை. தோன்றி மறையும் சில மாயங்களில் ஒன்றாகவே சரீரத்தையும் அதனுள் உறைந்திருக்கும் ஆன்மாவையும் காண்கிறேன். காத்திருப்புகளை நான் நம்புவதில்லை. புத்தனின் மீதான என் நம்பிக்கை கூட ஒரு வகையில் காத்திருப்பையே காட்டுகிறது. என் வழியில் புத்தனைக் காண விழையும் மனதின் ஆசையை அடக்குகிறேன். அவனின் புத்தமின்றி என்னுள் புத்தம் தேடத் தொடங்கிவிட்டேன். Read More  saaralil.blo