Skip to main content

Posts

Showing posts from September 18, 2016

அகிலாவின் 'மழையிடம் மௌனங்கள் இல்லை' - தமிழ் மணவாளன் மதிப்புரை

மழையிடம் மௌனங்கள் இல்லை முனைவர் தமிழ் மணவாளன் ( கவி நுகர் பொழுது –திண்ணை ) ( கவிஞர் அகிலா எழுதிய , ‘ மழையிடம் மௌனங்கள் இல்லை ’,  கவிதை நூலினை முன்வைத்து) கவிஞர் அகிலாவின் , “ மழையிடம் மௌனங்கள் இல்லை ” , என்னும் கவிதைத் தொகுப்பை வெளியிட்டு உரையாற்றுகிற வாய்ப்பினை வழங்கியதற்காக முதலில் என் அன்பும் நன்றியும்.  நவீன தமிழ்க்கவிதைச் சூழலில் கவிதைகளுக்கான பாடுபொருள்கள் மிகுந்த பெரும் பரப்பைக் கொண்டிருக்கின்றனவெனலாம். சமகாலத்தின் வாழ்வியல் சூழல் கொடுக்கிற பல்வேறு பிரத்யேகமான அனுபவங்கள் பயன்பாட்டுப் பொருள்கள் என இதுகாறும் தமிழ்க்கவிதை எதிர் கொள்ளாத பல விஷயங்களைப் பேசுபவையாக இருக்கின்றன. இப்படியான , சமகாலத்தின் புறச்சூழலும் சம்பவங்களும் அனுபவங்களும் தரும் உந்துதல் ஒரு புறம் இருப்பினும் அவற்றை எழுதுகிற கவிமனம் நம்மின் மனத்துக்கு நெருக்கமாய் , எந்நாளும் இருக்கிற இயற்கை , பறவைகள் , மிருகங்கள் கவிதைகளின் முக்கியமான பொருண்மைகளாக அடையாளம் கொள்கின்றன. பெரும்பாலும் சமகாலத்தின் கூறுகளைப் பேசும் போது இவையெல்லாம் தொன்மக்கூறுகளாகவும் உருவகங்களாகவும் படிமங்களாகவும் அமைகின்றன. ஏனெனில