Skip to main content

Posts

Showing posts from July 24, 2011

ஆரண்ய காண்டம்

ஆரண்ய காண்டம் தியாகராஜன் குமாரராஜாவின் ‘ஆரண்ய காண்டம்’ நம் தமிழ் சினிமா உலகிற்கு ஒரு வித்தியாசமான கோணத்தை கொடுத்திருக்கிறது. அவருடைய முதல் படம் இதுதான் என்பது ஒரு ஆச்சரியம். பிற மொழிகளில் இருந்து சுட்ட கதை என்பது தெளிவாக தெரிந்தாலும் கதை கோர்ப்பு நன்றாக வந்திருக்கிறது. Director Thiagarajan Kumararaja   இந்த படத்தின் கதையை ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால், போதை மருந்து விற்கும் கும்பலை பற்றியது. அந்த கும்பலில் இருக்கும் கொஞ்சம் நல்ல மனம் படைத்தவர்கள், நிறைய கெட்ட குணம் உடையவர்கள், இந்த கும்பலை சேராத வாழ்ந்து நொடிந்து போன ஒரு தகப்பனும் மகனும், கும்பலின் தலைவனிடத்தில் மாட்டிக்கொண்டிருக்கும் ஒரு அபலை பெண், அவளால் மையலில் பிறகு துப்பாக்கியால் விழ்த்தபடும் ஒன்றும் அறியாதவனாய் காட்டப்படும் ஒரு வாலிபன் இவர்கள்தான் கதையை நிர்ணயிக்கிறவர்கள். இந்த கதை, அது நடைபெறுவதாக காட்டப்படும் களம், அதில் நடைபெறும் தூப்பாக்கி சண்டைகள், வன்முறைகள், ஆபாசமான வசனங்கள் அனைத்துமே நம் மண்ணிற்கு சொந்தமானது இல்லை. பலதரப்பட்ட வட்ட வட்டமான DVD -களில் இருந்து copy அடிக்கப்பட்டவை. Mexican Hat மட்டும்தான் miss