Skip to main content

Posts

Showing posts from January 22, 2012

அக்கா - தங்கை பாசம்

மனதை வருடும்......            வேட்டை படத்தில் வரும் ' தைய  தக்க  தக்க.....   அக்காகேத்த மாப்பிள்ளை'  பாடல் ஹரிணி மற்றும் சைந்தவியின் குரலில் பெண்களாகிய எங்களுக்கு பல வருடங்கள் கழித்து ஒரு அக்கா தங்கையின் அன்யோன்யத்தை திரையில் காண்பித்தது.சமீரா ரெட்டியும் அமலா பாலும் ரொம்ப அழகு இதில். சகோதரிகளின் இடையே இருக்கும் அன்பு, மனம் விட்டு பழகும் விதம்,அந்த வயதின் நெருக்கம் எல்லாமே தனிதான். இந்த பாட்டு அதை உயிர்ப்பித்துவிட்டது.  பார்க்கும் போதே சகோதரிகளின் பாசமும் ஆட்டமும் பாட்டமும் மனதுக்குள் சந்தோஷத்தை கொடுத்தது. நன்றி அந்த படத்தின் இயக்குனர் லிங்குசாமிக்கு.... பெண்களுக்கு  மலரும் நினைவுகள்  .... ஆண்களுக்கு  enjoy ..... For Video https://www.youtube.com/watch?v=H2q4-lPxL1k&feature=related For Lyrics http://420lyrics.blogspot.com/2011/12/vettai-thaiya-thaka-song-lyrics.html

குடியரசு தின கொண்டாட்டங்களும்

                      பெண் பிள்ளைகளும்.....        இன்று சென்னையில் நடைபெற்ற   குடியரசு தின விழாவுக்கு சென்றிருந்தேன். வண்ண வண்ண தோரணங்களும் பூக்களும் தேசிய கொடிகளும் ஹெலிகாப்டேர்களும் கொடி ஏற்றலும் கொடி வணக்கமும் அரசின் செயல்களை விளக்கும் ஊர்திகளும் ஆட்டம் பாட்டமும் அசத்தலாகத்தான் இருந்தது.          இதில் கடைசியாக குறிப்பிட்டிருந்த ஆட்டத்தில் பெண்பிள்ளைகள் ஆடியது கண்ணுக்கு விருந்தாகத்தான் இருந்திருக்கும் நிறைய பேருக்கு....காமெராக்களும் செல் போன் விடியோக்களும் படம் பிடித்து கொண்டிருந்தன. பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் பெண் பிள்ளைகளை இப்படி ரோட்டில் ஆட வைக்க வேண்டிய கட்டாயம்தான் என்ன....எனக்கு முன்னே அமர்ந்திருந்த   இருவர் அழகாக எதிராஜ் கல்லூரி மாணவிகள் குனிந்து ஆடும் காட்சிகளை விடியோவில் படம் பிடித்து கொண்டிருந்தார்கள். ஆடிய பெண் பிள்ளைகளின் இடுப்பு மற்றும் அனைத்தும் அவர்களின் செல் போனில்.... clear    cleavage   ...  அதே போல் நூறு பேர் படம் பிடிக்கலாம்.  ஆடிய பாடல் என்னவோ தமிழ்த்தாய் வாழ்த்துதான்                       

கருவின் வாசம்....

என்னுள்ளே  தடுமாறுகிறேன் எனக்குள்ளே    தார்மீகம் தப்பா என்று.... கருவண்டுகள் கண் முன்னே காற்றுகூட காப்பாற்றாதா என்று.... மனத்தடத்தில் தேடுகிறேன் மானுடன் மயங்குவது எதற்கென்று.... போனவேகத்தில் திரும்பிவந்து போனதை நினைத்து மருகுவேனேன்று....  மனந்தந்த போதை நினைத்ததில்லை  மாயை புரியுமென்று.... பேதலித்த காதல் அறியவில்லை  போகமாய் விளையுமென்று... உன்னுயிர்  சிலிர்க்கவில்லை  என் மெய்யில் உள்ளதென்று.... விடை தெரியா பாதையில் வினவுகிறேன் கேள்வியொன்று....