தவ்வை புதினம் - உரை கவிஞர் அன்புதோழி ஜெயஸ்ரீ நூல்களை வாசித்து எழுதுவதற்கான நேரம் கிடைப்பதேயில்லை என்று பொய்யுரைப்பதைவிட எழுத ஆரம்பித்தபின் வாசிப்பு ஆர்வம் குறைந்து போய்விட்டது என்பதே உண்மை. ஆனால்,அகிலா மேடமின் எழுத்துக்களைவிட அகிலாக்கா எனக்கு நெருக்கமெனக் கொண்டிருப்பதால் 'தவ்வை' இருக்கின்றபடியே வெகு சீக்கிரமாய் எனை ஆட்கொண்டு விட்டாள். மேலும்,ஒரே மூச்சில் இந்நாவலை வாசித்து முடித்து தவ்வை குறித்துப் பகிர வேண்டிய உள் உந்துதலுக்குப் பெயர் பெண்மை எனும் சக்தி எனக்குள்ளும் இருப்பதால்தான் என்று எண்ணுகிறேன். Non-Linear எனும் கதை சொல்லல் முறையில் மூன்று தலைமுறை கதாபாத்திரங்கள்,நடைமுறை பழக்கங்கள் ,சம்பவங்கள்,சொல்லாடல்கள் என எல்லாவற்றையும் அனாயசமாக சுவாரசியம் குறையாமல் பிணைத்து நம்மை பிரமிக்க வைக்கிறார் நூலாசிரியர் அகிலா அவர்கள்.194 பக்கங்களாக...பின்னொரு காலங்களாய் 7 அத்யாயங்களும் முன்னொரு காலங்களாய் 6 அத்யாயங்களுமாய் மொத்தம் 13 என்று.... மேலைநாட்டு துர் எண்ணிக்கையாகவும், நம் இதிகாசக் கூறல் வகையில் 12 ஆண்டுகள் வனவாசம், ஓராண்டு அஞ்சாத வாசமென காலக்குறியீடுகள் மிகச் சரியாக இம்மண்ணின் எழுதப்