Skip to main content

Posts

Showing posts from May 6, 2012

உழைக்கும் வர்க்கமும்...

உட்கார்ந்து சாப்பிடற வர்க்கமும்......         நேற்று எங்கள் பகுதியில் உள்ள தபால் நிலையத்திற்கு சென்றிருந்தேன். நான்கு மாதங்களாக ஆர்.டி( RD ) கட்டாததால் மொத்தமாக ஒரு ஆயிரம் ரூபாய் தாள் ஒன்றையும் ஆர்.டி   கட்ட வேண்டி எழுதிய சிலிப்பையும் ஆர்.டி புத்தகத்துக்குள் வைத்து கையில், வெளியே தெரியும்படி வைத்திருந்தேன். திங்கள் கிழமை ஆதலால் ஐந்து பேர் வரிசையில் நின்று கொண்டிருந்தார்கள்...எங்கள் பகுதியில் இதுவே பெரிய கூட்டம். இல்லை என்றால் ஈ ஆடிக்கொண்டிருக்கும் எங்கள் தபால் நிலையம்.           நான் நான்காவதாக நின்றுகொண்டிருந்தேன். எனக்கு முன் நின்றிருந்த பெண்மணி என்னை ஏற இறங்க பார்த்து விட்டு என் சுடி எங்கே எடுத்தேன், எவ்வளவு ஆச்சு, தைக்க என்ன ஆச்சு, லைனிங் கொடுத்திருக்கிறேனா என்றெல்லாம் விசாரித்து கொண்டிருந்தார்.       அப்போது தான் அந்த பெண்மணி அவசரமாக உள்ளே வந்தாள். கையில் ஒரு form வைத்திருந்தாள். யாராவது கிடைப்பார்களா எழுதி கொடுக்க என்பது அவள் பார்வையில் இருந்தே புரிந்தது. யாரும் திரும்பவில்லை. நான் அவளை பார்க்கவும் என்னிடம் நீட்டினாள்.     அட்ரஸ் எழுதி இருந்த ஒரு துண்டு