Skip to main content

Posts

Showing posts from October 17, 2021

தவ்வை நாவலுக்கு சௌமா விருது & திருப்பூர் இலக்கிய விருது

    சௌமா விருது 2021 2021 க்கான சௌமா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தவ்வை நாவலுக்காக நான் விருது பெறுவது பெரும் மகிழ்வே. விருது வழங்கும் விழா அக்டோபர் 30 ஆம் தேதி மணப்பாறையில் நடைபெறுகிறது. சௌமா கல்வி நிர்வாக குழுமத்திற்கும் விருது குழுவினருக்கும் எனது நன்றியும் மகிழவும்.  அதன் அழைப்பிதழ் இங்கே :  தவ்வை நாவல் வெளிவந்து இரண்டு விருதுகளைப் பெற்றுள்ளது. செப்டம்பரில் அறிவிக்கப்பட்ட திருப்பூர் இலக்கிய விருது தவ்வை புதினத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளது. இப்போது சௌமா விருது.  தவ்வை அனேக மதிப்புரைகளையும் பெற்றிருப்பது சிறப்பே. முனைவர் பெண்ணியம் இரா பிரேமா, உரையாளர் சரவணன் மாணிக்கவாசகம், பெண்ணியச் செயல்பாட்டாளர் குறிஞ்சி அமைப்பின் நிர்வாகி பேரா சுபசெல்வி, பேரா விஜயராணி, ஷீலா சிவகுமார், ரஞ்சித் குமார் ஆகியோர் உரை எழுதியுள்ளனர்.  அந்த உரைகளை கட்டுரைகள் பகுதியில் பகிர்ந்துள்ளேன். வாசித்துக்கொள்ளலாம்.   

தவ்வை நாவல் குறித்து உரையாளர் ஷீலா சிவக்குமார் உரை

  தவ்வை புதினம் - மதிப்புரை தவ்வை குறித்து உரையாளர் ஷீலா சிவக்குமார் அவர்களால் எழுதப்பட்ட இந்த மதிப்புரை மெய்யெழுத்து இணைய இதழில் வெளிவந்துள்ளது.  அதன் இணைப்புக்கு : தவ்வை ................... நூல் : தவ்வை  பக்கங்கள்: 208 விலை: ரூ. 250/– வெளியீடு: டிஸ்கவரி புக் பேலஸ் உரை : ஷீலா சிவக்குமார்  ................................  ‘ராணியாய், ஜமீன்தாரிணியாய், எஜமானியாய் இந்தப் பெண்கள் வாழ்ந்த வாழ்க்கைக்குப்பின்னால் எத்தனை சிக்கல்கள் இருந்திருக்கும்’ என்ற வைசாலியின் சிந்தனையே நாவலின் கருவாக அமைந்துள்ளது. சாதாரண வாத்தியார் வீட்டுப் பெண்ணான, அறிவும் அழகும் நிரம்பிய தவ்வை, பணக்காரக் குடும்பத்தின் மருமகளாகிறாள். கணவன் தன் குறைபாட்டை மறைக்க அவளைப் பலவாறு இம்சிக்கிறான். அதை தன் மாமியார் மாமானாரிடமோ தன்னைப் பெற்றத் தாயிடமோ சொல்லாமல் தனக்குள்ளேளே வைத்து எல்லா துன்பங்களையும் அனுபவிக்கிறாள். துன்பத்திலிருந்து மீள கணவன் சொல்லும் வழி அவளைக் கோபப்படுத்துகிறது. ஆனாலும் அவளுக்கு வேறு வழி எதுவும் இருக்கவில்லை. இப்படியாக பெண் என்பவள் எப்படி இரகசியங்களை தனக்குள்ளேயே காத்து, அதன் வலியை தான் மட்டுமே அனுபவிக்கிறாள்

தவ்வை நாவல் குறித்து பேரா விஜயராணி மீனாட்சி உரை

  தவ்வை புதினம் - மதிப்புரை .............. தவ்வை குறித்து பேரா விஜயராணி மீனாட்சி  அவர்களால் எழுதப்பட்ட இந்த மதிப்புரை பிப்ரவரி மாத படைப்பு குழுமத்தின் 'தகவு' இதழில் வெளிவந்துள்ளது.  தகவு அதன் புகைப்படங்கள்  ............... புத்தகம் :   தவ்வை அறிமுகம் : பேரா விஜயராணி மீனாட்சி ..,,,,,,,,,,,,,,, ஆதி காலம் தொட்டு பெண்ணினுள் பெருங்கதையோ சிறுகதையோ உறைந்துதான் கிடக்கிறது. பெண்கள் தான் எத்தனை எத்தனை விதமாய் எத்தனை எத்தனை ஆயிரம் ரகசியங்களோடு.....ஊர், நாடு, இனம், மொழி, மதம், சாதி என எல்லாமே மாறியிருந்தாலும் பெண்கள் ஒன்றுதான். ஆணாதிக்கச் சமூகம் தீர்மானித்து வைத்திருக்கும் குடும்ப உறவும் அதன் தீர்மானங்களும் பெண்ணுக்குப் பலவித பிரச்சனைகளை வாரிவழங்குகிறது. இங்கே பெண்ணுணர்வுகளுக்கு இடமேயில்லை. சாதி மதம் ஏழை பணக்கார வர்க்கப்பாகுபாடு இப்படி எதை நோக்கினும் ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறுவேறானவை. அதிலும் இதில் குழந்தைப்பேறென்பது மிகமுக்கிய சூழல். அந்தவகையில் "தவ்வை" எனும் இந்த நாவலில் தோழர் "அகிலா" அவர்கள் பதினான்கு அத்தியாயங்களாகப் பிரித்து முன்னொரு காலம் பின்னொருகாலமாய்ச் சொல

தவ்வை நாவல் குறித்து முனைவர் பெண்ணியம் இரா பிரேமா உரை

   தவ்வை புதினம் - மதிப்புரை  தவ்வை குறித்து முனைவர் இரா பெண்ணியம் பிரேமா அவர்களால் எழுதப்பட்ட  இந்த மதிப்புரை Bookday (Thamizh Books.com) இணைய இதழில் வெளிவந்துள்ளது.  அதன் இணைப்புக்கு : தவ்வை .................. புத்தகம் : தவ்வை  புத்தக ஆசிரியர் : அகிலா  புத்தக மதிப்புரை : முனைவர் பெண்ணியம் இரா. பிரேமா  பதிப்பகம் : டிஸ்கவரி புக் பேலஸ்  ....................................... எழுத்தாளர் அகிலா அவர்களின் தவ்வை நாவல் பெண் சார்ந்த புனைவாகும். பெண் எழுத்தாளர்கள் தொடாத ஒரு கருவினை அவர் தொட்டுப் பேசியுள்ளார்.  எழுத்தாளர் தி ஜானகிராமன் இக்கருவினை  தன்னுடைய "நள பாகம்" என்ற நாவலில் எடுத்தாண்டுள்ளார். ஆனால் அந்நாவலில் இக்கருவினை, பெண் சார்ந்த புனைவாக அன்றி , ஆண் சார்ந்த புனைவாகப் பேசியுள்ளார். எழுத்தாளர் பெருமாள்முருகன் தன்னுடைய "மாதொருபாகன்" என்ற நாவலில் இக்கருப்பொருளை ஒரு தனிப்பட்ட சமூகம் சார்ந்ததாக எடுத்தாண்டுள்ளார். இந்த இரு எழுத்தாளர்களுமே பெண்ணின் உளவியலை அணுகிப் பார்க்கத் தவறிவிட்டனர். சகப் பெண் எழுத்தாளர்கள் தொட்டுப்பார்க்கத் தயங்கும் ஒரு விவாதத்திற்குரிய கருப்பொருளை எழ

தவ்வை நாவல் குறித்து திரு சரவணன் மாணிக்கவாசகம் உரை

 தவ்வை நாவல் அறிமுகம்  ~ சரவணன் மாணிக்கவாசகம்  தவ்வை  தவ்வை - அகிலா: ஆசிரியர் குறிப்பு: கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், பெண்ணியவாதி, ஓவியர் மற்றும் மனநல ஆலோசகர். கோவையைச் சேர்ந்தவர். கவிதை, சிறுகதை, குறுநாவல், நாவல் என பத்து தொகுப்புகளுக்கு மேல் வெளியிட்டுள்ளார். இந்த நூல் இவரது சமீபத்திய நாவல். 1979ஆம் வருடம். மாடிப்படியில் ஆறேழு பெண்கள் சிரிப்பும் சத்தமுமாய் உட்கார்ந்திருந்தார்கள். காலையில் மணமுடித்த பெண்ணை அதில் ஒருவர் மாடிவரைக் கூட்டிப் போய் விட்டுவிட்டு வந்தார். முன்பின் அறிமுகமில்லா இருவர் எப்படி உறவுகொள்ள முடியும் என்ற சந்தேகத்திற்கு அன்றும் என்னிடம் பதிலில்லை. இன்றும் பதிலில்லை. தவ்வை மணமுடிக்கையில் வயது பதினாலு. கணவன் ராமநாதனுக்கு வயது இருபது. ராமநாதனுக்கு படிப்பு வரவில்லை, வியாபாரம் வரவில்லை. கணக்கு சரிபார்க்க வரவில்லை.  அப்பா இல்லாத பெண் தவ்வையை ராமநாதன் வீட்டில் பெண் கேட்டு வந்தது அவள் அதிர்ஷ்டம் என்றே அவள் அம்மா உட்பட எல்லோரும் நினைத்திருப்பார்கள். பணவசதி மட்டும் பெண்ணுக்கு எல்லாமாக போய்விடுமா! வீட்டுப்பெண்ணிடம் வன்முறையில் இறங்குபவன் மனதாலோ, உடலாலோ, அறிவாலோ இல்லை ஏதாவது ஒர

தவ்வை நாவல் குறித்து திரு ரஞ்சித் குமார் உரை

 தவ்வை புதினம் - மதிப்புரை  தவ்வை - அகிலா மதிப்புரை : T N ரஞ்சித் குமார்    "பெண்கள்தான் எத்தனை எத்தனை விதமாய்..! அவர்களுக்குள் எத்தனை ஆயிரம் ரகசியங்கள்..!  ஊரின் பெயர், நாட்டின் பெயர், இனத்தின் பெயர், சாதியின் பெயர், மதத்தின் பெயர் எல்லாம் மாறியிருக்கலாம். ஆனால், பெண்கள் ஒன்றுதான்! " (பக்கம் 206) வாசகனுக்கு புனைவு அளிக்கும் தனிச்சலுகை, எத்தனை காலம் ஆனாலும் கதாபாத்திரங்களால் ஒருபோதும் பரஸ்பரம் அறிந்து கொள்ளும் வாய்ப்புகளற்ற ரகசியங்களை மனதோடு வைத்துப் பேணச் சொல்லி நம் மீது படைப்பு வைக்கும் நம்பிக்கை. இப்படியான சுதந்திரம் சமயங்களில் எந்த அளவுக்கு மகிழ்ச்சிகரமானதாக இருக்கிறதோ சில சமயங்களில் அதுவே ஒருபோதும் நம்மால் இறக்கி வைக்கவோ ஆற்றுப்படுத்தவோ முடியாத பெரும் சுமை ஒன்றை சுமக்க வேண்டிய கட்டாயத்தை விதித்து விடுகிறது. நீர்வழிப் படூஉம் நாவலின் இறுதி வரி தரும் அதிர்ச்சி ஒரு உதாரணம். அதேபோல கதாபாத்திரங்களால் மட்டுமே புரிந்து கொள்ளும் படியான உளவியல் சூட்சுமங்கள் கதைகளில் தென்படும் போது வாசகனின் சிந்தனையில் உருவாகும் கேள்விகளுக்கு நேரடியான பதில்கள் கிடைக்காமல் போவதும் உண்டு. சமீபத்தில்