காட்டிடைவெளி (மின் புத்தகம்) ஆசிரியர் : அகிலா ' காட்டிடைவெளி ' என்னும் இந்த புத்தகம், ஒரு மனதின் பயணம். நாம் நடந்துக் கொண்டே இருக்கும்போது, நம் மனமும் அதற்கான ஒரு பாதையில் நடக்கத்தொடங்கும். அதன் சுவாரசியங்கள், விருப்பங்கள், புன்னகைகள், அழுகை எல்லாம் தனி. அவற்றை எல்லாம் இந்த புத்தகத்தில் வாசிக்கலாம். இந்த புத்தகம் கொரோனா காலத்தில் வெளிவருகிறது. என்னுடைய 'தவ்வை' நாவல், 'இங்கிலாந்தில் 100 நாட்கள்' பயண இலக்கியம் இவை அச்சில் ஏறியபிறகு, என் கையிருப்பு இன்னொரு புத்தகத்தை அச்சில் ஏற்ற முடியாத சூழலில், மனம் நோக்கிய பயணத்தை எழுதிய இப்புத்தகம் அமேசான் கிண்டிலில் (Amazon Kindle) வெளிவருகிறது. விலை : ரூ 80 அமேசான் அன்லிமிடெட் ஆப்ஷனில் நீங்கள் இருந்தால் இலவசமாக வாசித்துக் கொள்ளலாம். புத்தகத்தின் என்னுரையில் இருந்து சில துளிகள் இங்கே உங்களுக்கு.. வனாந்திரத்தின் ஊடான அடர்த்தியில் நடப்பது கடினமும் இயல்பானதும் ஆகும். கடினம் எவ்வாறு இயல்பானது ஆகும் ? பாதைகள் ஒழுங்கற்று , பயம் சூழ்ந்து , எங்கு இட்டுச்செல்லும் என்பதறியா உணர்வு நடப்பதைக் கடினப்படுத்...