கோவை புத்தகக் கண்காட்சி 2017 தொடக்கவிழாவும் ஜெயமோகன் விருது விழாவும்.. ~ அகிலா கொஞ்சம் மிதமான மற்றும் பலத்த காற்றுடன் என்ற வானிலை அறிக்கை போல் இருந்தது ஜூலை மாதத்து இந்த மாலைபொழுது. கோவையின் மிகப்பெரிய வணிக அமைப்பான கொடிசியா நடத்தும் 'கோயம்பத்தூர் புத்தகத் திருவிழா' ஆரம்பவிழாவிற்கான அனைத்து முன்னெடுப்புகளும் களை கட்டியிருந்தன. 'வாழ்நாள் சாதனையாளர் விருது' எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு என்பதும் அறிவிக்கப்பட்டிருந்தது கொடிசியா நிர்வாகத்தால். ஜூலை 21 புத்தகக் கண்காட்சி, மொத்தமாய் 175 பதிப்பகத்தார், 265 அரங்குகள் என்று கொடிசியா வணிக வளாகம் முழுமையும் நிறைந்திருந்தது. தேசிய புத்தக அமைப்பின் (NBT) தலைவர், திரு பல்தேவ் பாய் சர்மா கண்காட்சியைத் கத்தரி வெட்டித் திறந்துவைத்தபோது, அரங்கு நிறைந்திருந்த புத்தகங்களின் மணம் நாசி தொட்டது. வாங்க நேரமில்லை. விஜயா பதிப்பகம் வேலாயுதம் அய்யாவிடம் குழந்தை இலக்கியம் குறித்த பேச்சுடனும், எழுத்தாளரும் நண்பருமான சு வேணுகோபால் அவர்களின் பரிந்துரையில் நவீன சிறுகதைகளின் பக்கம், காலசுவடில் ஒரு புத்தகப்புரட்டலும், இன்னு