Skip to main content

Posts

Showing posts from February 19, 2012

கண்ணாடி போதாதா....

கிளியும் கிண்ணமும் எதற்கு மகளே? Reproduction of Ravi Varma's by me....  செப்பு உதடும் செதுக்கிய மூக்கும்  சுருள் முடியும் சுறுசுறு கண்களும்  காது கடுக்கணும் கால் கொலுசும்  என் அழகு தேவதையே என் குட்டி பதுமையின்  தலைவாரி பொட்டிட்டு அலங்கார ஆடை உடுத்தி  உச்சி முகர்ந்து  திருஷ்டியும் கழித்து  உன் பிஞ்சு கன்னத்தில் முத்தமிட்டு  வா  மகளே ,  உலகம் பார்க்க செல்வோம்..... இந்த உலகம் பார்க்க செல்வோம்.....

மனமே.....

நிறுத்து....... sketched by me ஒன்றை நினைத்து ஏங்குவது மற்றொன்றை நினைத்து மருகுவது  அடுத்ததை நினைத்து அலைவது  எத்தனை நினைப்புதான் உனக்கு  நிறுத்து மனமே  உன் லீலைகளை  உன்னால் நான் படும்பாடு  மாறாதே ஒரு எண்ணத்திலிருந்து  மாற்றாதே என்னையும்  நீ இல்லாமலே நான் பிறந்திருக்கலாமோ?

கண்ணாமூச்சி

விளையாட்டு  கண்ணை கட்டி சுற்றிவிடப்பட்டு நிமிட நேரம் நின்று நிதானித்து  பின் தேட கைகளை நீட்டும்போது  தொடும் இடமெல்லாம் காற்றாய் தோழிகள் எங்கேயென்று மனம் தேடும்  சிரிப்பொலிகளில்  கொலுசுகளின் சிணுங்கலில்  வளையோசைகளில் தாவணியின் சரசரப்பில்  எங்கும் தோழிகளின் வாசம்  கட்டை அவிழ்த்து பார்க்கும்போது  காணவில்லையே யாரையும்  வெகு நாட்களாய் சுற்றிவிட்டேனோ?  கையில் கிடைப்பதும்  காணாமல் போவதுமாக  வாழ்க்கை முழுவதுமே இந்த   கண்ணாமூச்சி விளையாட்டு...