அவதிப்படும் அண்ணன்களும்... பெரும்பாலும் பெண்கள் சுயநலவாதிகள்தான். அதை நானே மறுக்க முடியாது. பிறந்த நிமிடத்தில் இருந்தே இப்படித்தானோ என்று யோசிக்க வைத்துவிடுவார்கள். நெருங்கிய தோழிகளிடம் கூட தனக்கு வேண்டியதை மறைத்து வேண்டாததை சொல்வது, நட்பை தன் விருப்பு வெறுப்புக்காக குழி தோண்டி புதைப்பது, தனக்கு ஒரு ஆபத்து என்றால் தன் ஆண் நண்பர்களை வீட்டில் போட்டு கொடுப்பது, தன அப்பா, அம்மா, அண்ணன், கணவன் என்று ஒருவர் விடாமல் தன சுயநலத்துக்கு பயன்படுத்தி கொள்வது என்று ஏக நல்ல குணாதிசயங்கள் பெண்களுக்கு உண்டு. ஆட்டோ ஓட்டும் அவனை எனக்கு பல வருட பழக்கம். அவனுக்கு தகப்பன் இல்லை. தாயும் ஒரு தங்கையும்தான். அவனுக்கு வரும் வருமானத்தில்தான் தங்கைக்கு நகை 15 சவரன் போட்டு கல்யாணமும் அதன் பிறகு இரண்டு பிரசவமும் பார்த்து கிட்டத்தட்ட ஏழு வருடங்களாக கடன் வாங்குவதும் அதை அடைப்பதுமாக இருந்து நொந்து நூடுல்ஸ் ஆகி போன ஒரு பாசக்கார அண்ணன் அவன். இப்போது அவனுக்கு 38 வயது. திருமணத்திற்கு பெண் பார்க்க இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறார்கள். வயதின் காரணமாக பல வரன்கள் தட்டி போக, ஒரு வரன் மட்டும