பெரியாரும் பெண் முன்னேற்றமும் "ஆண்கள் பெண்களை படிக்க வைக்க வேண்டும். அவர்களுக்கு உலகப் படிப்பும், ஆராய்ச்சிப் படிப்பும் தாராளமாய்க் கொடுக்கவேண்டும்." பெரியார் அவர்கள் சொன்னபடி, படிப்பும் கொடுக்கப்பட்டிருக்கிறது. "பெண்களுக்குச் சொத்துரிமை கொடுத்துவிட்டால், அவர்களுக்கு இருக்கும் எல்லாவகையான அடிமைத்தனங்களும் ஒழிந்துபோகும்." அதுவும் சட்டமாகியிருக்கிறது. "கணவனை இழந்தோர் மறுமணம் செய்துகொள்வதில் தீங்கில்லை." அதையும் செய்துவருகிறோம். தந்தை பெரியார் சொன்ன, செயலாக்கிய, செயலாக்கம் பெற போராடிய, பெண் உரிமையை, விடுதலையை, கிட்டதட்ட நெருங்கிய பின்பும் சமூகத்தில் ஏன் இத்தனை பெண் சார்ந்த வன்முறைகள்? தனக்கு எதிராய் பெண்ணை ஏற்றுக் கொள்ளமுடியாத ஆண்வர்க்கத்தின் நிலைபாடும் இதற்கு ஒரு காரணம். இன்றைய ஆண் குழந்தைகளை வளர்க்கும் தாய்மார்கள், அவர்களுடன் பழகும் பெண்பிள்ளைகளை, தோழிகளை, அவர்களுடன் பயிலும் சக மாணவிகளை, தன்னைவிட வயதில் மூத்த பெண்களை எவ்வாறு சகஜமாக ஏற்றுக்கொள்ள வேண்டும், எவ்வாறு அணுகவேண்டும் போன்றவற்றை கற்பிக்க வேண்டும். விட்டுக்கொடுத்தலையும்,