அம்ரிதா ப்ரிதம் (1919 - 2005) காதலை கடக்க நேர்ந்த எவரையும் அது விட்டுவைப்பதில்லை. அலைகழிக்க செய்து உவகை, அழுகை, ஆத்திரம், மௌனம், இறப்பு என்னும் கலவைகளுக்குள் உலர்த்தி எடுத்து அடங்குகிறது. காதலைக் கொண்டாடும் கலாசாரங்களில் அதை தூய அன்பென்றும் காதலித்தவனையே கைப்பிடிப்பவள் பாக்கியசாலியென்றும் அதை இழந்தவர்கள் அபாக்கியவாதிகளாகவும் தன்னையே மாய்த்துக் கொள்பவர்களாகவும் காட்டப்பட்டிருக்கிறது. கலாசார காலகட்டங்கள் மாறிய காலத்தில் காதலும் பல அவதானிப்புகளுடன் பயணிக்கத் தொடங்கியது. இருபதாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த பஞ்சாபி கவிஞர் அம்ரிதா ப்ரிதம் அவர்களின் வாழ்க்கையை சற்று காதலின்பால் நோக்க நேரம் கிடைத்தது. அவர் காலத்தில் வாழ்ந்த சக பெண்களை விட மிகுந்த தைரியமும் தன்னுயர்வும் கொண்டவர். சிறு வயதிலேயே தாயை இழந்து, திருமணமும் முடித்து வைக்கப்பட்டது. லாகூரில் வசித்து வந்தார். அவரின் இளம்வயது இந்தியா பாகிஸ்தான் பிரிவினையை சந்தித்திருந்தது. அந்த காலகட்டத்தில் நடந்தவைகளை பஞ்சாபி மற்றும் இந்தியில் கவிதையாய் தொகுத்திருந்தார். அவை மிகவும் பிரபலமானவை. அவரின் கவிதைகள், நாவல்கள் போன்றவற்றிற்கு, Sahitya