Feel The Army Cast & Crew Director : A R Murugadoss Producer : S Dhanu Music : Harris Jeyaraj Cinematography : Santhosh Sivan முதல் நாளே துப்பாக்கி பார்க்கணும்னு ஒரு முடிவோட இருந்தேன். குடும்பத்தில் எல்லோரும் எனக்கு எதிராக இருக்க (விஜய் படமாம் - குப்பை படத்தை டிவிகாரன் போட்டா உட்கார்ந்து பார்ப்பாங்க ) , நான் பிடிவாதமாக இருக்க, இரண்டாம் நாள் inox தியேட்டரில்....படம் நல்லா இல்லையென்றால் குடும்பமே என்னை காலி செய்துவிடுவதாக மிரட்டிதான் வந்தார்கள். படம் முடிந்து வெளியே வந்தபிறகு எல்லோரும் பேசிக்கொண்டே இருந்தார்கள் படம் சூப்பர்ன்னு.....என்னை மறந்துபோய் வெகு நேரம் ஆகி இருந்தது....சூப்பரு.... முதல்ல டைரக்டர் முருகதாஸுக்கு ஒரு பெரிய சபாஷ்... போலீசை வைத்து நிறைய கதை, சென்டிமென்ட் பக்கத்தை டச் பண்ணாம கூட எடுத்திருக்காங்க. ஆர்மியை வைத்து கதை பண்ணுவது கொஞ்சம் கடினம்தான். ராணுவம் செய்கிற வேலை எதுவும் நம்மை பெரிதாக கவர்ந்ததில்லை.... இதுவரை வந்த படங்களில் எல்லாம் ராணுவ வீரன் லீவில் ஊருக்கு வந்தால், ஒன்னு குடும்பத்தை அழிச்சவங்களை பழி வாங்குவான், இல