Skip to main content

Posts

Showing posts from April 27, 2014

உழைப்பாளிகள்..

அம்பானியும் அசிம் பிரேம்ஜியும்  பெரிய உழைப்பாளிகள்..  வருடம் முழுவதும் உழைத்து  வானை முட்டும் வீடு கட்டி  இரவை பகலாக்கிக் கொண்டிருக்கும்  பணக்கார உழைப்பாளிகள்.. அய்யாசாமியும் ஆறுமுகமும்  சிறிய உழைப்பாளிகள்..  வாழ்க்கை முழுவதும் உழைத்து  காது குத்தும் பையனுக்கு  கடனுக்கு கடுக்கன் வாங்கும் ஏழை உழைப்பாளிகள்..  இதில் வீடு எங்கே? காற்று வாங்க  கடற்கரைக்கு வந்து  சிலையாய் போன  சிறிய உழைப்பாளிகள் இவர்கள்..  இப்படியாகதான்  இந்தியாவில்  வருடம் தவறாமல்  உழைப்பாளிகள் தினம்...

ஓடை..

நீண்ட நடைக்கு பின் நீரின் ஸ்பரிசம்  அதன்  விளிம்புத் தொட்டு  விழுந்த பார்வை  நாணல்களின் நாளங்களின் மேல் அதில்  சிறிதாய் சந்திரன்  நனைந்து  தள்ளாடி  விட்டு  விலகி நடக்க,  என் பின்  ஓடை நீர்  கால் சுவடுகளாக..

நூல் மதிப்புரை : பசுமை வளையம்

நூல் : பசுமை வளையம் ஆசிரியர் : ஆட்டனத்தி என்கிற தண்டபாணி   (27.4.2014 அன்று நடைபெற்ற கோவை இலக்கிய சந்திப்பில்  இந்த நூலைப் பற்றிய என் மதிப்புரை) நூல் மதிப்புரை : காலம் காலமாகக் கதை சொல்வதும் , கதை கேட்பதும் எல்லாத் தேசங்களிலும் , எல்லா மக்களிடையேயும் வாய்மொழி மரபாக இருந்து வந்திருக்கிறது.   பொய் க்கதை , புனைகதை , கட்டுக்கதை , பழங்கதை என்றெல்லாம் கதைகள் அக்காலத்தில் சுட்டப்பட்டுள்ளன . குடும்பங்களில் சிறு குழந்தைகளுக்குப் ‘ பாட்டி கதை ’ சொல்லும் மரபு உண்டு . சிறுகதை என்பது சுருக்கமான , கதைகூறும் புனைவுவகை உரைநடை இலக்கியமாகும். பெரும்பாலும் ஒரு மையக் கருவினை அல்லது நிகழ்ச்சியின் அநுபவத்தை விபரிக்கும் இலக்கிய வகையாகும். பெருங்கதைக்கும் சிறுகதைக்கும் உள்ள வேறுபாட்டைப் புதுமைப்பித்தன் தெளிவாக எடுத்துக் கூறியிருக்கின்றார். " சிறுகதை வாழ்க்கையின் சாரம் என்றால் நாவல் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் நிலைக்கண்ணாடி.. வாழ்க்கையின் சிக்கல்களை , அதன் உயர்வை , அதன்சிறுமைகளை , உலாவும் பாத்திரங்களான மனிதக் கூட்டத்தின் சலனத்தில் , அவற்றின் குண விஸ்தாரத்துடன் ச