Skip to main content

Posts

Showing posts from August 16, 2015

ஒற்றையாய் ஒருத்தி

ஒற்றையாய் ஒருத்தி எப்போதும் போல் கதவை இன்னொரு சுவராக்கினாள் கசங்கிப்போன புத்தகம் ஒன்றுடன் சன்னலினோரமாய் அமர்ந்தாள் சரிந்திருந்த அருகாமை கிளையில் இலையைத் தின்று பெருத்திருந்த புழுவுடன் பகல் பொழுதைத் தொடங்கினாள் அதனிடம், பாட்டி, தாத்தா, அத்தையென எல்லோரையும் பற்றிய நேற்றைய செய்திகளைச் சொல்லிவிட்டாள் இன்றைய செய்தியான, அம்மா, பள்ளிக்கு மதிய உணவு டப்பாவை எடுக்காமல் போனதையும் சொல்லிவிட்டாள் தொழுவத்தில் கன்று ஈன்றிருந்த பசு, பால்காரனை, கால் உதைத்து தள்ளியதையும் சொல்லிவிட்டாள் சித்தி் பெண்ணின் திருமணத்தில் வரனே தகையலையா இன்னும் என்ற கேள்விகளுடன் கூடவே இணைக்கப்பட்ட கோவில் முகவரிகளைப் பற்றியும் அதனிடம் பேசியாகிவிட்டது கண்ணாடி பார்த்தால் இன்னும் கருப்பாகிவிடுவாயென எதிர்வீட்டு அக்கா சொன்னதையும் சொல்லிவிட்டாள் அது, தலை உயர்த்தி, கண்களை உருட்டியபோது நீ ரொம்ப அழகாயிருக்கேன்னும் சொல்லியாகிவிட்டது சொல்வதற்கு கதைகள் தீர்ந்துபோன போது, போன வாரம் தன்னை பெண் பார்த்துவிட்டு, பிடிக்கவில்லை என்று சொல்லிப் போனவன் இருபத்தியொன்றா அல்லது இருபத்திரெண்டாவென புத்தகத்துடன் யோசிக்கத் தொடங்கினாள்..

மனிதர்களைக் கற்றுக்கொண்டு போகிறவன்

மனிதர்களைக் கற்றுக்கொண்டு போகிறவன் ஆசிரியர் செந்தில் பாலா பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தில் என்னால் அறிமுகப்படுத்தப்பட்ட மனிதர்களைக் கற்றுக்கொண்டு போகிறவனவாய் இருக்கும் செந்தில் பாலாவின் கவிதைப்பூக்கள் நூல். ஆசிரியர் அறிமுகம்  ஆசிரியர் செந்தில்பாலா, கதை, கவிதை, நாடகம், சிறார் கதைகள் என்னும் தளங்களில் எழுதிக் கொண்டிருப்பவர். செஞ்சியை சேர்ந்தவர். அரசு பள்ளியொன்றில் கணித ஆசிரியர். என்னுரை  நூல் அறிமுகம்  மனிதர்களைக் கற்றுக் கொண்டு போகிறவன் என்னும் த லைப்பின் வசமே ஓர் ஈர்ப்பு உள்ளது. செந்தில்பாலாவின் கற்றுக்கொண்டு போகிறவன் போய்விடுகிறான். அதை வாசிக்கிறவன் வசப்படுத்தப்படுகிறான். அப்படிதான் நானும் வசப்படுத்தப்பட்டேன். கவிதைகளைக் கடக்கும் சமயம், இதை நானும் கடந்திருக்கிறேனே என ஒவ்வொன்றும் எனக்கு ஒரு நிறுத்தத்தைக் காட்டுகிறது. செந்தில்பாலாவின் கோட்டோவியங்களில் அந்த செதுக்கிய எழுத்துக்களில் தங்கி அசைபோடும் நிலை வாசிக்கும் ஒவ்வொருவருக்குள்ளும் உண்டாகிறது. ஆசிரியர் செந்தில்பாலா  ஒரு மாலைநேரத்து கோப்பை தேநீருடன் கடந்துவிட அமர்ந்தேன