இருட்டை மையப்படுத்திய இரவின் நாக்கு ஓன்று விம்மிக் கொண்டே கல்லறையின் கற்சுவரை உடைத்தெறிந்தது... கடைசியாய் மிச்சமிருந்த மல்லிகையின் வாசத்தை அணிந்துக் கொண்டு அவனின் மௌனத்தின் வாசம் தேடி அலைந்தது... பந்தலிட்ட அந்த பெரிய வீட்டின் வாசலில் நின்று உச்சஸ்தாயில் பெயரிட்டு உரக்கக் கத்தியது.... ஜன்னலின் இடுக்குகளில் வெளிச்சக் கீற்றுகள் தோன்றின... உள்ளிருந்த அந்த மௌனத்தின் பிம்பம் அவனின் இருப்பை உறுதிப்படுத்தியது... உயிரின் வெறி அதனுள் தீப்பந்தமாய் உள் நுழைந்து அவனின் மௌனம் உடைத்து வெளியேறியது பெருத்த குரலெடுத்து அவன் ஓலமிட சாத்வீகமாய் திரும்பியது கற்சுவருக்குள்...