பெண்களும் அம்மாக்களும் நீயா நானா என்னும் தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சியில் பெண் பிள்ளைகளுக்கும் அவர்களின் அம்மாமார்களுக்குமான விவாதம். பிள்ளைகள் தங்களுக்கு திருமணத்திற்கு 100 பவுன் நகை, கார் என்றெல்லாம் நிபந்தனைகள் விதித்ததும் பெற்றோர் முழித்துக்கொண்டிருந்ததும் எல்லோராலும் பார்க்கப்பட்டது. அதில் பேசிய பெண்பிள்ளைகளைத் தராசில் ஏற்றாதவர்கள் கிடையாது. பெற்றோரின், உடன்பிறந்தோனின் சிரமம் உணராது பேசியது அவர்களேதான். அதன்பின் படிந்திருக்கும் நியாயங்களைப் பற்றியும் நாம் பார்க்கவேண்டும். அவர்கள் தங்கள் பெற்றோர் மீது வைத்த முதலும் முடிவுமான குற்றச்சாட்டு, சிறுவயதில் இருந்தே சாப்பாடு, படுக்கை, படிப்பு என்பதில் தொடங்கி திருமணம் வரை தொடரும் ஆண், பெண்ணென்ற பால் பாகுபாடு. ஆண், பெண் பாகுபாடு பார்ப்பது பெரும்பான்மையான மத்தியதர குடும்பங்களில் வழக்கமான ஓன்று. பையனுக்கு திருமணம் முடித்துவைத்து அவனோடு இருக்கப்போகிறோம், அவன்தான் நம்மைக் காப்பற்றப் போகிறான் என்னும் பழைய நூற்றாண்டின் இந்திய சமூக கோட்பாடுதான் இதற்கு காரணம். இந்த கால சூழலில் பெண்ணுக்கு படிப்பு கொடுப்பது கட்டாயம், கௌரவமென ஆ