பொன்னியின் செல்வன் 2 : ஒரு பார்வை பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வெளிவந்த மறுநாள் திரைப்படம் பார்க்க, இங்கிலாந்தில் யார்க்ஷயரில் உள்ள மிடில்ஸ்பரோவில் சினிவேர்ல்ட் சினிமாஸுக்கு சென்றிருந்தேன். நுழையும்போது இரண்டாம் பாகம் பார்க்கப்போகிறோம் என்ற பெரியதொரு எதிர்பார்ப்பும் (பாகுபலி 2 க்கு ஒரளவுக்கு இருந்தது) என்னிடம் இல்லை எனலாம். மாலை ஏழு மணி காட்சி. சரியாக ஏழு மணிக்கு குடும்பமாக நாங்க (நான், கணவர், என் மருமகள், என் அக்காவின் மருமகள்) தியேட்டருக்குள் நுழைந்தோம். ஏழரை மணிக்குள் குடும்பமாக, நண்பர்களாக தமிழில் பேசிக்கொண்டே உள்ளே வந்து சேர்ந்தார்கள் நம் மக்கள். பாதி தியேட்டர் நிறைந்திருந்தது. மிடில்ஸ்பரோவை சுற்றியிருப்பவர்கள் மட்டும் இந்த தியேட்டருக்குத் தமிழ்படம் பார்க்க வந்திருக்கக்கூடும். லண்டன், பெர்மிங்காம் போன்ற நகரங்கள் என்றால் கூட்டம் சற்று அதிகமாக இருந்திருக்கலாம் என்பது இங்கிருப்பவர்களின் கருத்து. நண்பர்களாக வந்திருந்தவர்கள் சிலர் ஆங்கிலத்தில் பொ செ 1 குறித்து உரையாடிக் கொண்டிருந்தனர். ஆங்கிலத்தில் subtitles இருப்பதால் இந்தியாவின் பிற மொழி பேசுவோரையும் இங்குள்ள பிரித்தானியர்கள்