Skip to main content

Posts

Showing posts from October 27, 2019

கனவுகளும் வயதும்..

மனமும்.. நெடுந்தூக்கத்தில் வரும் கனவுகள் குறித்து எனக்கு நிறைய ஐயங்கள் உண்டு. எங்கோ ஓடிக்கொண்டிருப்போம், யாரோ துரத்துவார்கள், அவர்களின் முகங்கள் தெரியும், இவனா என்று வினா வரும். ஒரு வீட்டுக்குள் ஓடுவோம், அது மிகவும் தெரிந்த மாதிரியான அறைகளைக் கொண்டிருக்கும். அதன் ஒரிடத்தில் அம்ர்ந்து ஒளிந்துக்கொள்வோம். அருகே ஒரு பாம்பு தலை நீட்டி படம் எடுக்கும். பயந்துப் போய் மறுபடியும் ஓடுவோம். கனவு தீர்ந்து நிஜம் உதற வைக்கும்.  அதில் வருவது நாம் என்பது, நாம் எதிரிகளை எதிர்க்கொள்வதில் இருந்து புரியமுடியும். ஆனால் அந்த 'நாம்' என்பதற்கு முகம் இருக்காது. வயது இருக்காது, காட்சிக்குத் தேவையில்லையெனில் உடைகளும் புலப்படாது. அப்போது அந்த முகத்தை ஏன் நாம் நமது முகமாக கொள்கிறோம்? முகமே தெரியாத போது, கனவில் நடப்பதை நமக்கானதாய் எதற்கு எடுத்துக் கொள்கிறோம்?  ஜேன் மில்லர் சொன்னது போல, 'I wonder how many of us are old in our dreams'.. வயதும் முகமும் அற்ற கனவுகளை எண்ணி எண்ணி துயருருவதை என்னவென்பது.. என்றாவது ஒரு நாள் கனவில் வந்த இடத்தைக் கண்ணில் கண்டு தொலைப்போம். இதை எங்கேயோ