இன்று என்னுடைய சில கவிதைகளை அச்செடுக்க ஒரு ப்ரௌசிங் சென்ட்டர் கம் செராக்ஸ் கடைக்குச் சென்றிருந்தேன். அருகில் இருந்த காலேஜில் இருந்து மாணவ மாணவிகளும் காப்பி எடுத்துக் கொண்டிருந்தனர். அந்த கடைக்காரப் பெண் அதில் பிஸியாக இருந்ததால் நானே சிஸ்டமில் அமர்ந்து என்னுடையதை பிரிண்ட் கொடுத்துக் கொண்டிருந்தேன். என்னையே கவனித்துக் கொண்டிருந்தனர் இரண்டு மாணவர்கள். இருவர் கையிலும் ஏகப்பட்ட தாயத்து புது மஞ்சள் குங்கும வாசனையுடன். 'என்ன இன்டர்னல்ஸா ?' என்று கேள்வியைப் போட்டேன். 'ஆமாங்க்கா...எப்படி தெரியும்?...எங்க காலேஜ்லேயா வேலை பார்க்குறீங்க?' என்று பதில் கேள்வி கேட்டான். 'அப்படியெல்லாம் இல்லே...உன் புது தாயத்து + கடைசி நேர செராக்ஸ் காப்பி இதெல்லாம் தான் சொல்லுது...' என்றவுடன் ஹிஹி...என்று சிரித்தான். என் பிரிண்ட் எடுத்த பேப்பரை எட்டிப் பார்த்து 'இது என்ன தமிழா?...' என்றான். ஆமாம்...என்றதும், 'ப்ப்ச்...' என்று இளக்காரமாய் ஒரு உச் கொட்டினான். 'நீ என்ன...' என்று கேட்டேன். 'கெமிஸ்ட்ரி...' என்று பெருமிதமாய் சொன்னான். ந