அன்னா ஹசாரே என்ற ஒரு தனிப்பட்ட மனிதரை, ஒரு காந்தியவாதியை பற்றி ஒரு நாளுக்கு இரு முறை தினசரிகளும், ஒரு நிமிடத்திற்கு ஒரு முறை தொலைகாட்சிகளும் கடந்த 13 நாட்களாக அறிவித்துக்கொண்டே இருக்கின்றன. அவரின் உண்ணாவிரதம் லஞ்சம் என்னும் பெரும் பூதத்தை எதிர்த்துதான். ஊழலை ஒழிக்க அவர் எடுத்த இந்த முயற்சி பாராட்ட படவேண்டியதுதான். அதன் முடிவாக மத்திய அரசு லோக்பால் பில்லை கையில் எடுத்திருக்கிறது. ' இனிமேல் இந்தியாவில் ஊழலே யாரும் செய்ய முடியாது. செய்தாலும் தப்பிக்க முடியாது. .......'இப்படித்தான் ராம்லீலா மைதானம் மட்டும் அல்லாது நாடு முழுவதும் பேசிக்கொண்டு, இந்த 13 நாள் விசேஷத்தை கொண்டாடி முடித்துவிட்டு, 'அப்பாடா ஒரு பெரிய வேலை முடிந்தது' என்று எல்லோரும் வீட்டிற்கு போய் நிம்மதியாக தூங்கிவிட்டார்கள். நன்றாக நடந்தேறியது இந்த நாடகம். இதில் எத்தனை வர்த்தக நிறுவனங்கள் எவ்வளவு சம்பாதித்தார்கள் என்பதை ஆராய ஒரு கமிஷன் போட்டால் தேவலை. நம் இந்திய அரசாங்கம் என்பது நாட்டில் ஏற்படும் பிரச்சனைகளை சமாளிக்