Skip to main content

Posts

Showing posts from March 4, 2012

அம்மா என்கிற

பெண் தெய்வம்..... மகளிர் தினத்தை அன்னையர் தினமாக எனக்கு நீ மாற்றியதென்ன.... உன்னை மறக்க பல வருட   அவகாசம் தந்த பிறகும் முடியவில்லையே..... உன் வயதில் பார்க்கும் அனைவரும் என் தாயாகி போனதென்ன.... உன் சேலையை உடுத்திய போது உன்னையே உணர்ந்ததென்ன.... முகம் காட்டும் கண்ணாடி கூட உன் முகத்தையே என் முகமாக காட்டியதென்ன.... உன் சமையல் எனக்கு தெரியாது உன் வேலை நேர்த்தியும் என்னிடம் கிடையாது உன் பொறுமை என்னிடம் இல்லை  உன் தைரியம் மட்டுமே என்னிடம் அதுவே என் பொக்கிஷமும்...... உன் பெயர் பொறித்த என் வீட்டு பாத்திரங்கள் உன் வாசனையுடன் என் பொன் நகைகள் உன் விருப்பத்துடனான என் படிப்பு - மொத்தத்தில்  உன் அடையாளங்களுடன் எப்போதுமே நான்......  Doris Day's 'Que Sera Sera...' song This song is one of my childhood favorites and i used to sing it to my mother Dedicating to my mother... Watch in YouTube http://www.youtube.com/watch?v=xZbKHDPPrrc   Lyrics http://www.lyriczz.com/lyrics/doris-day/12960-que-sera-sera/