கூழாங்கற்கள் ஆசிரியர் : கனவுப் பிரியன் (27.11.2016 அன்று கோவை இலக்கிய சந்திப்பில் என்னால் மதிப்புரை செய்யப்பட்டது) நூலும் ஆசிரியரும் : கூழாங்கற்கள் என்னும் இந்த சிறுகதை தொகுப்பு 2015 டிசம்பரில் வெளியிடப்பட்டிருக்கிறது. ஆசிரியர் கனவுப்பிரியனின் இயற்பெயர் முஹம்மத் யூசுப் என்பதாகும். இந்த நூலுக்கு கி ராஜநாராயணன் அய்யா உட்பட ஆறு பேர் அணிந்துரை அளித்திருக்கிறார்கள். டில்லி தமிழ் சங்கத்தைச் சேர்ந்த திரு ஷாஜகான் அவர்கள், ஆசிரியர் கனவுப்பிரியன், கார்த்திக் புகழேந்தியுடன் சேர்ந்து கி ரா வின் ' கதைசொல்லி ' இதழை மீண்டும் உயிர்ப்பித்ததாக தனது அணிந்துரையில் குறிப்பிட்டிருக்கிறார். ஆசிரியரும் தனது உரையில், தான் முகநூலில் எழுதிவந்த சுவாரசிய எழுத்துகளை இச்சிறுகதை தொகுப்பாய் வெளியிட்டிருப்பதாகக் குறிப்பிட்டு உள்ளார். கதைக்களம் : கூழாங்கற்கள் தொகுப்பின் ஆசிரியர் சவுதியில் வேலை பார்த்து வருகிறார். சவுதியில் வேலை செய்வதால் இந்த நூலும் புலம் பெயர்ந்த தமிழனின் கதை தொகுப்பாகத்தான் இருக்கும் என்ற நமது கணிப்பு தவறுவதில்லை. திருமணம் செய்துக்கொண்டு ம