ஆண்கள் ‘என்னவெல்லாமோ எழுதுறியாம், உனக்கென்ன தெரியும் அதை பற்றி..’ – இது ஒரு கணவன் என்னும் ஆணின், மனைவி என்னும் பெண் குறித்த தெரிதலுக்கான கேள்வி என்றால், இல்லை என்பேன். ‘உனக்கு இது குறித்து ஒன்றும் தெரியாது. எதுக்கு லூசு மாதிரி எழுதுறே’ என்பதற்கான நாகரீக கேள்வி அது. மனிதர்களையும் மனித மனங்களையும் அவர்களின் வாழ்வியல் விஷயங்களையும் பற்றி சமூகவெளிகளில் பேச பெண்ணுக்கு அனுமதி இன்னும் முழுதாய் கிடைக்கவில்லை என்பது வருத்தமே. நிறைய மேடைகளில் பேசும்போது, ஆணுக்கு இணையாய் பெண்ணும் அமர்கையில் அவளுக்கு அந்த மேடையில் கிடைக்கும் மரியாதை தனித்துவம் வாய்ந்தது. அப்படியான பிரபலங்களைக் குறித்து வீட்டில் தன் மனைவியிடம், ‘எப்படி பேசுறாங்க...அருமை..’ என்று சிலாகிக்கும் ஆண்கள் உண்டு. சிலர் அதற்கும் ஒருபடி மேலே போய், ‘நீயும் இருக்கியே, எதுக்கெடுத்தாலும் மூக்கை வடிச்சுகிட்டு..’ என்று சொல்வதும் உண்டு. என் தோழிகளில் சிலர் அவர்களின் கணவர்களைப் பற்றி, ‘மரியாதை கொடுக்கிற மாதிரியும் மரியாதை கொடுக்காத மாதிரியும் இருக்கு..’ என்று சொல்வதுண்டு. இதற்கு காரணம், இப்போதெல்லாம் கிட்டத்தட்ட ஆண்களுக்கு