Skip to main content

Posts

Showing posts from February 1, 2015

பிள்ளைகளை வாழவைப்போம்..

இன்று ஒரு குடும்பத்தைச் சந்தித்தேன். அந்த பெரியவருக்கு 70 வயது இருக்கும். அவர் பிரபல கல்லூரியில் பேராசிரியராய் இருந்து ஓய்வு பெற்றவர். அவர் மனைவியும் அவ்வாறே. அவர் மகனைப் பற்றி விசாரித்தேன். அவர் ஒரு freelancer என்று சொன்னார். திருமணமாகி பள்ளி செல்லும் வயதில் பேத்தி. வேறு பெரிய நகரத்தில் போய் வேலை செய்ய அவர் மகனை அனுப்ப அவர் விருப்படவில்லை. ரெண்டு பென்ஷன், அப்புறம் சேமிப்பு, அவ்வப்போது மகனுக்கு கிடைக்கும் வருமானம் போதும் என்றார். தாய் தகப்பன்கிட்டே இருந்தால் போதும். பெரிதாக சம்பாதிக்க எந்த ஊருக்கும் போகத் தேவையில்லை என்றார். மெச்சுகிறேன் அவரின் சுய திருப்தியை, ஆனால் ஒரு சிறு வருத்தத்துடன். அவர் பேசும் போது அவர் மகனின் முகமும் மருமகளின் முகமும் இறுக்கமாய் இருந்தது. அவர் அவருடைய வாழ்க்கையை மிக அற்புதமாக பெரிய படிப்பு படித்து, டெல்லி எல்லாம் சென்று பெரிய உத்தியோகம் பார்த்து நிறைவடைந்து அமைதி நாடி அமர்ந்துவிட்டார். ஆனால், அவரின் மகனுக்கு எந்த முன்னேற்றமும் எந்த கிரியேடிவிட்டியும் இல்லாத ஒரு வாழ்க்கையைக் கொடுத்திருக்கிறார். இந்த முப்பது வயதில் அவனும் சாதிக்க ஆசைப்படு

துடுப்பின்றி எங்கு நோக்கி போவதென..

மலையிறக்கம் பாயும் நீரின் வழி துடுப்பின்றி இழுபடும் தோணி அகண்ட படுகை கண்டு நிதானித்து தொட்டுச்சென்ற காற்றுடன் காதல் கொண்டு தன் விசை மறந்து பயணிக்கும் காற்று விலகும் நொடியில் சூழும் அந்தகாரத்தில்    துடிப்பின்றி எங்கு நோக்கி போவதென திசையறியாது சமைந்து போகும்..    நனைந்த அடிபலகையின் பாரம் நீரைவிட கனத்துப்போகும்.. புன்னகை பூக்களின் மந்தகாசம் காட்டி சுற்றியிழுக்கும் நீண்ட காம்பு சுமந்த கொடிகளின் ஆழம் தேடியலையும் நினைவுகளை அறுத்து, வெளிச்ச சந்தங்களை தேடி, பயணிக்க உந்தும்.. துளிர்க்கும் சிறு சுவாசத்தில் துடுப்பின்றியும் திசையின்றியும் மேலெழும்.. நெருங்கி விலகிய அந்தகாரத்தின் நிழல் இரவின் வானமாய் தன் மேல் படர்ந்திருக்க கரை தேடி கண்களை அலையவிடும் காற்றுடனான காதலை ஒறுத்து..