Skip to main content

Posts

Showing posts from March 25, 2012

விண்மீன்கள்...

டைரக்டர் : விக்னேஷ் மேனன்  ஒளிப்பதிவாளர் : ஆனந்த் ஜீவா  கண்ணில் பட்ட விண்மீன்கள்  :  ராகுல், அனுஜா, விஷ்வா, ஷிகா, பாண்டியராஜன்    'விண்மீன்கள்'  திரையில் பெயர் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் பெயரின் காரணம்தான் தெரியவில்லை. விதவிதமான கதாபாத்திரங்கள் இருந்து ஒவ்வொருவருடைய செயல்களும் படத்தின் கதையில் பாதிப்பை ஏற்படுத்தி இருந்தால் பெயர் ஒகே ஆகியிருக்கும். சரி, தலைப்பை விடுவோம்.... செரிபரல் பால்சி ( cerebral palsy ) இந்த நோயால் பாதிக்கப்பட்டு உடல் ஊனமுற்ற ஒரு மாற்று திறனாளியின்  கதைதான் இது.புதிதான ஒரு முயற்சிதான்.முற்றிலும் என்று சொல்ல முடியாது. ஏற்கனவே 'அஞ்சலி' திரைக்கு வந்து 22 வருடங்கள் உருண்டோடிவிட்டது. அந்த திரைப்படம் மூளை வளர்ச்சி குன்றிய குழந்தையை பற்றியது. அக்கால கட்டத்தில் அந்த திரைப்படம் ஒரு விழிப்புணர்வை உண்டாக்கியது. ஆனால் இப்போது ஏதாவது ஒரு நோயை வைத்துகொண்டு படம் பண்ணுவது சகஜமாகிப் போனது.  நம் நடைமுறை வாழ்க்கையில், அக்கம் பக்கங்களில், உறவினர்  வீடுகளில் என்று இந்த மாதிரி குழந்தைகளை பெற்றவர்கள் அருமையாக ஆதரித்த

நல்ல பெண்மணி.....

    மதம்  என்ற  போர்வையில்  ஒருவரை  ஒருவர் அடித்து கொள்வதை நிஜ வாழ்க்கையிலும் வலைதளங்களிலும் தினமும் பார்க்கிறோம். ஒவ்வொரு மதத்திலும் சொல்லப்பட்ட கருத்துகள் பொதுவாக ஒரே மாதிரி இருப்பினும் சொல்லப்பட்ட விதம் வேறு வேறாகத்தான் இருந்திருக்கிறது.கருத்து சொல்லபடுகிற மனிதர்களும் வேறுபடுகிறார்கள்.....பிரம்மச்சாரிகள், சம்சாரிகள், பெண்கள், குழந்தைகள்....என்று அவரவர்களுக்கு என்று தனி தனியாக போதித்திருக்கிறார்கள்.பெரும்பாலும் அதை கடைபிடிக்கவும் வற்புறுத்தப்படுகிறார்கள். அதுவும் பெண்கள் சில மதத்தில் மிகவும் கட்டாயபடுத்தபடுவதாகவும் கேள்விபட்டிருக்கிறோம்....அது பெரும்பாலும் உண்மை இல்லை என்பது நான் சந்தித்த ஒரு முதிய பெண்மணியிடம் இருந்துதான் தெரிந்து கொண்டேன்.   அவர்  என் தோழியின் ஆசிரியை, ஒரு இஸ்லாமியர், அந்த காலத்து BA...Madras University....தலைமை ஆசிரியையாக பனி செய்து ஓய்வு பெற்றவர்.  அவருடைய மதத்தில்   பெண்களின் கட்டுபாடுகள் குறித்த பல தவறான கருத்துகளை திருத்தினார்.   இப்போது இருக்கும் பெண்களுக்கு சுதந்திரம் படிப்பில் மட்டும் அல்லாமல், உடை விஷயத்திலும் வழங்கபடுகிறது. ஒரு கட்டுப்பாட்டு

இதென்ன பரபரப்பு....

பெண்ணே..... எழுந்த நிமிடத்தில் இருந்து சமைக்கவும், ஹீட்டர் போடவும் வாஷிங் மிஷின்ல துணியை திணிக்கவும் ஹாட் பேக் தயார் செய்யவும் ஸ்கூட்டியை கிளப்பி  முதலில் ஸ்கூலிலும் பிறகு அலுவலகத்திலும் மாலையில் பாட்மிட்டன் கிளாசில் பையனையும் டான்ஸ் கிளாசில் பெண்ணையும் இறக்கிவிட்டு காய் வாங்கி சமையல் முடித்து மறுபடியும் இருவரையும் சுமந்து வந்து படிக்க வைத்து, உண்டு, உறங்கி இடையில் கணவரின் எழுப்புதலுக்கு உடன்பட்டு மீண்டும் காலை வேளை...... பூக்களுடன் பேச நேரமில்லாமல்.... பட்டாம்பூச்சியை பார்க்க முடியாமல்.... பறவைகளை தொலைத்துவிட்டு தேடாமல்.... சேலை மடிப்பை கூட ரசித்து கட்டமுடியாமல்.... ஓட்டமும் நடையுமாக இதென்ன பரபரப்பு பெண்ணே.... வாகனங்களின் நெரிசல்களில் முகமூடியாய் நாம் - நம் முகத்தை தொலைத்து..... சத்தங்களின் இடையில் சாந்தமாய் நாம் - நம் மனசாந்தியை இழந்து..... ஓட்டம் குறைத்து ஒரு நிமிடமாவது நிதானித்து நிமிர்ந்து பாருங்கள் வானம் தெரிகிறதா என்று.... வானின் நிர்மூலம் கூட அழகுதான்..... அங்கங்கே தெரியும் மேகங்கள் கூட அழகுதான்......