மின் வேலை செய்யத் தான் வந்தான் அவன்... அவனுக்காகவே தைக்கப்பட்டதுப் போல் நிறையப் பைகள் வைத்த நீலவண்ண காற்சிராய் அவனுடைய வேலைக் கருவிகளின் அஞ்சறைப் பெட்டியாய் அதன் மடிப்புகளில் அழுக்கு அடைந்திருக்கிறது... முக்காலி மேல் முக்காலி அடுக்கி அதன்மேல் விந்தையாய் விழாமல் நிற்கிறான்... இட்லிக்கும் தேநீருக்கும் வயிறு சற்று உப்பியது அவ்வளவே... மற்ற நேரம் மெலிந்தே இருந்தான்... அறிவொளி நகரில் வீடு என்றான் மின்னறிவு அதிகம்தான் நூறு போறும்க்கா என்றான் என்ன செய்வாய் இதை என்றேன் தம்பிக்கு ஜியாமெட்ரி பாக்ஸ் வாங்கணும் என் கணக்கு சரிதான் இவன் ஏணி தான்...