Skip to main content

Posts

Showing posts from January 1, 2012

தேடிய காதல்

கிடைத்த இடம்.... அக்னியை வலம் வருவதாக நினைத்து  உன் சுண்டு விரல் பிடித்து கடற்கரையில் நடந்தபோது  அடித்த மின்சாரத்தில் தானே  இந்த மாநகரமே வெளிச்சமாகியது... எங்கு புதைத்தாய் கண்ணே  நம் ஆத்மார்த்தமான காதலை  கடற்கரை மணல்வெளியிலா? படகு மறைவிலா? கலங்கரை விளக்கின் உச்சியிலா? இல்லை நீல்கடலின் ஆழத்திலா? எதில் கண்ணே கூறு... ஓ...இது ஆத்மார்த்தமான காதல் அல்லவா உன் ஆத்மாவுக்குள்தான் இருக்கிறது எங்கும் தொலைக்கவில்லை நீ  நம்புகிறேன் இப்படிதான்  தேடிக் களைத்த பிறகு...

உதயமான இனிய புத்தாண்டு

போன வருடத்தின்(நேற்றுதான் !!!!) கடைசி நாளிலிருந்தே நண்பர்களுக்கு, உறவினர்களுக்கு மற்றும் முகம் தெரிந்தவர்கள், முகம் தெரியாதவர்கள் (முகநூலைதான் சொன்னேன் ) என்று எல்லோருக்கும் SMS அனுப்ப ஆரம்பித்திருப்போம்.  நானும் அப்படிதான் செய்து கொண்டிருந்தேன். எனக்கு ரயில் சிநேகிதிகள்/சிநேகிதர்கள் என்று ஒரு கூட்டம் உண்டு.குடும்பத்தில் ஒவ்வொரு உறவுகளும் ஒவ்வொரு ஊரில் போய் வசிப்பதால் வரும் சுற்றல்தான் இது.  ஓரிரு ரயில் சிநேகிதங்களை தவிர மற்றவர்கள் யாரும் என்னுடன் போனில் தொடர்பில் இல்லை. சில சமயங்களில் அந்த தொடர்புகளை contact list இல் இருந்து நீக்கி விடலாமா என்று கூட யோசித்ததுண்டு. இன்று காலையில் இருந்தே சமையல் வேலைகளுக்கு இடையில்  சுற்றமும் நட்புமாக போன் மேல் போன் செய்து கொண்டிருக்க அல்லாடி கொண்டிருந்தேன். செடிகளுக்கு பூச்சி மருந்து அடிப்பவன் வேறு. இன்று வந்தால் தானே அவனும் ஐம்பது ரூபாய் சம்பாதிக்க முடியும்.  அவனுக்கு வடை எல்லாம் கொடுத்து அனுப்பிவிட்டு வந்தால் மறுபடியும் போன். இந்த முறை என்னை ஆச்சிரியபடுத்தியது அந்த அழைப்பு - எதிர்பாராத ஒரு ரயில் சிநேகிதியிடம் இருந்து. ஒரு வ