Skip to main content

Posts

Showing posts from January 31, 2016

கைம்பெண்ணும் தபுதாரனும்..

சமீபத்தில் வந்த ஓரு விழாவுக்கான அழைப்பிதழில், ' விதவையர் நல சங்கம் ' என்ற சொற்கள் கண்ணில் பட்டது. விதவை என்னும் சொல்   மனதுள் ஒரு சிறு கோபம் கலந்த வருத்தம் தோற்றுவித்ததை மறுப்பதற்கில்லை. விதவை என்னும் சொல்லை ஒழித்து குடும்பத்திற்கான நல சங்கமாக மாற்றலாம். அந்த பெண்களை மட்டும் குறிக்க வேண்டுமானால், அவளை பெண் என்பதை பறைசாற்றும் வேறு சொற்களைக் கொண்டு அடையாளப்படுத்துங்கள். துணைவியர், இல்லத்தரசிகள் என்று நிறைய சொற்கள் இருக்கும்போது இன்னும் எதற்கு அந்த சொல்? இல்லையென்றால், இவை, துணைவியார், இல்லத்தரசி போன்ற சொற்கள், இந்து ஆகம சட்டத்தின் படி சுமங்கலிகளை மட்டுமே குறிக்கும் சொற்களா என்ன.. கணவனை இழந்தால் அந்த பெண்கள் வாழ தகுதியற்று போய்விட்டார்களா என்ன. திருமணம்தான் ஒரு பெண்ணை, அவள் வாழ்வைத் தீர்மானிக்கும் என்றால், அதையும் ஆண், பெண் இருவருக்கும் பொதுவில் வைப்போம். அதை நடைமுறையில் சாத்தியபடுத்த விரும்பாதவர்களால்தான் பெண்கள் மட்டும் பலியாகிறார்கள்.       மறுமணங்கள் புழக்கத்தில் இருக்கும் இந்த காலகட்டத்திலும் , பெண்களை விதவை என்று இவ்வாறு முத்திரை குத்தும் பழக்கம் இன்ன