💢 கதை வாசிப்பு தினம் 💢 ~ அகிலா.. 👧 நான் பேசும் பெரும்பாலான மேடைகளில் இலக்கியத்தை ஏதாவது ஒருவகையில் உள்ளே திணித்துவிடுவது வழக்கம். இலக்கியத்தில் இருக்கும் சிறுகதைகள், மேலாண்மை பொன்னுசாமி, சுந்தர ராமசாமி, அம்பை, வாஸந்தி முதல் எஸ் ரா, பவா செல்லத்துரை, கா சி தமிழ்க்குமரன், பாரதி கிருஷ்ணகுமார், கலைச்செல்வி, என்னுடையது மற்றும் பலருடையது வரை நான்கைந்து கதைகளைச் சொல்லிவிடுவதும் அதிலிருக்கும் சமூகப்பிரச்சனை குறித்து பேசுவதும் உண்டு. பள்ளி, கல்லூரி கூட்டங்கள் என்றால், கல்லூரி நிர்வாகத்தால், ஆசிரியர்களால் பிடித்து இருத்தப்பட்டவர்கள் என்றாலும், பிள்ளைகள் தலையசைத்து ஆமோதித்தும் கண்விரித்தும் குறிப்பெடுத்தும் உள்வாங்குவது தெரியும். பேசி முடித்தும் சில பிள்ளைகள் தேடிவந்தும் பேசுவதும் உண்டு. சில நிகழ்வுகள் கருத்து பரிமாற்ற கூட்டமாய் மாறியதும் உண்டு. இலக்கிய கூட்டங்கள் என்றால், கேட்கவே வேண்டாம். கவனிப்பும் ஆமோதிப்பும் உடன் சில சமயங்களில் எதிர்ப்பும் இருக்கும். அதுவும் நல்ல ஒரு விவாதக்களம் தானே. பொதுவிழாக்கள் என்றால் இதற்கெல்லாம் நேரெதிர். படித்தவர்கள், பள்ளி படிப்பைத் தாண்ட