Skip to main content

Posts

Showing posts from January 24, 2016

இளமை ஊஞ்சலாடுகிறது..

மீண்டும்.. டீன் ஏஜ்ஜில் ஒரு திரைப்படத்தை உள்வாங்கியதற்கும் இப்போது நாற்பதுகளில் உள்வாங்குவதற்கும் வித்தியாசம் அதிகமிருக்கிறது. அனுபவங்கள் அதிகமில்லாத அந்த வயதில், ஜெயகாந்தனின் கதைகளுக்குள் தலையை உருட்டிக் கொண்டிருந்தாலும், காதலை மறுக்கும் எந்த வாதமும் எதிர்ப்பாகவே மனதில் பதிந்தது எனலாம். காதலை உடல் ரீதியாக யோசித்தறியா வயது அது. தெய்வீகம் என்னும் வார்த்தையை காதலுடன் சேர்த்து பார்த்த வயது. என் கல்லூரி தோழி ஒருத்தி எண்பதுகளின் காலகட்டத்திலேயே ரொம்ப அட்வான்ஸ். படகின் மறைவில் காதலை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போனதற்காக அவளுடன் பேசாமல் அவளை நட்பில் இருந்து ஒதுக்கிவைத்த காலம் அது. அந்த காலகட்டத்தில் வெளிவந்த இளமை ஊஞ்சலாடுகிறது திரைப்படத்தை வெவ்வேறு கோணங்களில் தோழிகளுக்குள் அலசியிருக்கிறோம். நாயகன், நாயகி தவிர்த்து இன்னொரு பெண்ணுடன் மோகம் கொண்டவனை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும், காதலில் உடலளவில் பரிசுத்தமாய் இருப்பது உண்மை இல்லையா என்பது போன்ற கேள்விகளும் அதனால் கதானாயகனாய் நடித்த கமலை பிடிக்காமல் போனதும் என்று நிறைய விஷயங்கள் தர்க்க ரீதியாகவும் அலசப்பட்டு இருந்தது எங்களுக்குள். ( அந்த க...

இந்திய குடியரசு தினம்

குடியரசு தின வாழ்த்துகள்  இன்று நமது இந்தியாவின் 67வது குடியரசு தினம். இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் செயலாக்கப்பட்ட நாள் இது. 66 வருடங்களுக்கு முன்பு முதல் குடியரசு தலைவர் ராஜேந்திர பிரசாத் அவர்கள் கொடி ஏற்றி குடியரசை துவக்கி வைத்த  நாள். சுதந்திர தினம் என்பது நமக்கு சுதந்திரம் கிடைத்த நாள். நம் நாட்டுக்காக அநேகம் பேர் தியாகம் செய்து கிடைத்த வரலாறு கொண்ட நாள். நம்மை உணர்பூர்வமாய் பினைக்கக்கூடிய ஒன்று. ஆனால் குடியரசு தினமோ பெரும்பாலும் வெறும் ஒரு விழாவாக பார்க்கப்படுகிறது. அதுவும் இந்த ஜனவரி மாதத்தில் குளிரும் பனியும் போட்டி போடும் டில்லியில், பிரதமர் அமர் ஜவான் ஜோதியில் மலர்வளையம் வைக்க, குடியரசு தலைவர் கொடி ஏற்றுவதும் விமானங்கள் பூ தூவுவதும், முப்படைகள் அணிவகுப்பதும் சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் நாட்டின் அதிபர் பார்வையிடுவதும், வீர சாகசங்களுக்காய் விருதுகள் வழங்கப்படுவதுமாக கொண்டாட்டங்கள் ஆகவே நகர்ந்து அது முடிந்தும் விடுகிறது. அதன் பிறகு நம்ம டிவியில் வேறு சேனல் திருப்பி, இன்றைய விடுமுறை நாளை சினிமாக்களோடும் சினிமா நட்சத்திரங்களோடும் கொண்டாடி முடிப்போம...