நேற்று ஒரு பெரிய வீட்டு திருமணம்... மண்டபம் பெருசு...அவங்க மனசும் பெருசு... பெரிய பெரிய ஸ்டேஜ் decoration லட்ச கணக்கில் பணம் செலவழித்து... buffet சாப்பாடு ஒரு பக்கம், இலை சாப்பாடு ஒரு பக்கம், அதிலும் சைவம், அசைவம் என தனித்தனியாக.... கார் காராய் ஆசாமிகள், அவர்களின் டிரைவர்களுக்கு என்று தனி சாப்பாடு.... உள்ளுரிலிருக்கும் ஒரு அரசியல்வாதி தன் படை பட்டாளத்துடன்...அவருக்கென்று தனி வீடியோ coverage வேற...நல்ல வேளை பொண்ணு மாப்பிள்ளை காலில் விழாமல் இருந்தார்.... கழுத்திலிருந்து இடுப்பு வரை அடுக்கடுக்காய் நகை அணிந்த பெண்கள்... இதுக்கேன்றே hairdresser வைத்து ஸ்பெஷல் கொண்டை எல்லாம் போட்டு மெல்லிசாக ஒரு பட்டு கட்டி, அதில் பாதி உடம்பை காட்டி, யார் திருமணத்திற்கு ரெடியாக இருக்கிறார்கள் என்று வயது வித்தியாசம் தெரியாத அளவுக்கு மேக் அப் போட்டு மின்மினிகள்.... எவ்வளவு தான் காசை கொட்டி கல்யாணம் செய்தாலும் அதே தாலிதான் கழுத்தில், அதே சாந்தி முகூர்த்தம் தான் கட்டிலில், அதே குப்பை கொட்டல் தான் வாழ்க்கையில்.... எல்லோரும் ஒரே மாதிரிதானே வாழ்கிறோம்...பின் எதற்க