என் கணவரின் வேலை நிமித்தமாக சில மாதங்கள் திருநெல்வேலியில் இருந்த போது, induction stove -ல் சமையல் செய்தேன். கோயம்புத்தூர் வந்த பிறகு பழையபடி gas stove -ல் சமையல். ஒரு பத்து நாட்களுக்கு குழம்பி போய் நிறைய காமெடி எல்லாம் செய்தேன். Induction stove -ல் பாத்திரத்தை வைப்பதற்கு முன்னால் பாத்திரத்தின் அடியில் தண்ணீர் ஏதாவது இருந்தால் napkin வைத்து துடைப்பது வழக்கம். அதே மாதிரி gas stove க்கும் செய்து கொண்டிருந்தேன். இதாவது பரவாயில்லை. induction stove -ல் வைத்த பாத்திரம் சுடுவதில்லை. சும்மா கையாலேயே இறக்கிக் கொண்டிருந்தேன். இங்கே வந்தும் அதே மாதிரி gas stove -ல் இருந்து சூடான பாத்திரத்தை கையால் தொட்டு நாலைந்து தடவை கையை சுட்டுக் கொண்டேன். மின்சாரம் போய்விட்டால் ரொம்ப tension ஆகி விட்டேன். மின்சாரம் இல்லாமல் திருநெல்வேலியில் சமைக்க முடியாமல் hotel லில் வாங்கி சாப்பிட்ட நாட்கள் நிறைய. இங்கே இருப்பது induction stove அல்ல, gas stove தான் என்பது என் நினைப்புக்குள் வருவதற்கே எனக்கு பத்து