Skip to main content

Posts

Showing posts from October 9, 2016

சர்வதேச பெண் குழந்தைகள் தினம்..

பெண் குழந்தைகளின் தினம் இன்று. கள்ளிப்பால் கொடுத்த காலம் கொஞ்சம் கடந்து, குழந்தை திருமணங்களை எதிர்க்கும் தருணம் இது. வளரும் நாடுகளில் மூன்றில் ஒரு பெண் குழந்தைக்கு பதினெட்டு வயதுக்குமுன் திருமணம் நடப்பதாக ஐக்கிய சபையின் அறிக்கை கூறுகிறது. மத்தியதர குடும்பங்களில் இளவயது திருமணங்கள் குறைவு. பெற்றோர் பெண் பிள்ளைகளைப் படிக்கவைக்க போராடுகிறார்கள். அதனால் அங்கெல்லாம் வாழ்த்துகள் போதும். ஆனால் பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கும் பல குடும்பங்களில் பதினைந்து பதினாறு வயதில் பெண் பிள்ளைகளை மணமுடித்து கொடுக்கும் பழக்கம் இருக்கிறது. உடலளவிலும் மனதளவிலும் வளர்ச்சியடையாத பருவம் அது. அந்த வயது திருமணம் என்பது எத்தனை பாதிப்புக்களை அந்த பெண்ணுக்கும் அவளின் பிள்ளைகளுக்கும் அவளைச் சார்ந்தோருக்கும் உண்டு பண்ணும் என்பது நாம் அறிந்ததே. இவர்கள் நம்மைச் சுற்றியே இருக்கிறார்கள். நம் வீட்டில் வேலை செய்யும் பெண்மணி, அருகில் பெட்டிக்கடை நடத்துபவர், நம் தெருமுனையில் சிறுகடை வைத்திருக்கும் டெய்லர் இப்படி. இம்மாதிரி குடும்பங்களில்தான் நம்மை போன்றோரின் உதவி தேவைப்படுகிறது. பெண்பிள்ளைகளை பெற்றவர்களிடம் பெ