Skip to main content

Posts

Showing posts from October 11, 2020

மிச்சமான மௌனம்

மழைச்சாரலில் ஒழுகும்    முழுநிலவின் ஒளி,    இலைகளின் மேனி தழுவும்;  மரத்தின் பாதம் கண்டு வழியும்;  மண்ணின் மீது விழுந்தெழும் காலம்,  மௌனமாய் கழியும்; கற்களைத்  துடைத்தெழும் பொழுதுகளில்  மட்டும்  துணுக்கிட்டு  ஓலமிட காத்திருக்கிறது, மிச்சமாய் வழியும்  சத்தம் !!