Skip to main content

Posts

Showing posts from January 5, 2014

என் கவிதை நூல் ‘சொல்லிவிட்டு செல்’ வெளியீட்டு விழா...

நூல் வெளியீட்டு விழா  பனியின் புல்வெளியை சுமந்து நிற்கும் அழகான உதகையின் மார்கழி மாத ஒரு காலை வேளையில் (டிசம்பர் 29, 2013 ) படைப்பாளிகளாகவும் படிப்பாளிகளாகவும் கூடியிருந்த பெரிய அரங்கில்  என்னுடைய இரண்டாவது நூல் ‘சொல்லிவிட்டுச் செல்’ வெளியீடு சிறப்பான முறையில் நடைபெற்றது.  வந்திருந்து வாழ்த்திய அனைத்து தோழமைகளுக்கும் என் நன்றி. விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர் தகிதா அறக்கட்டளை. இது அவர்களின் நான்காம் ஆண்டு வெளியீடு. சுமார் 60 நூல்கள் இதுவரை வெளியிட்டிருக்கிறார்கள்.  கவிஞர் பா. கிருஷ்ணன் அவர்களின் ‘சுவடுகள் நெய்த பாதை’ நூலும் இந்த விழாவில் வெளியிடப்பட்டு சிறப்புரையும் ஆற்றினார். மற்றும் கவிஞர் பீர் ஒலியின் ‘சிறகுகளின் சுவாசங்கள்’, கவிஞர் கடங்கநேரியானின் ‘நிராகரிப்பின் நதியில்’, கவிஞர் தியாகுவின் ‘நீயும் நானும்’, கவிஞர் சிலம்பரசனின் ‘காதலாகி போனேன்’, கவிஞர் மௌனிகாவின் ‘கவிதை பொழியும் தூரிகை’ நூல்களும் வெளியிடப்பட்டது. தகிதா பதிப்பகத்தின் உரிமையாளர் கவிஞர் போ. மணிவண்ணன் அவர்களின் ‘பனி சுமந்த மேகங்கள்’ என்னும் மொழிபெயர்ப்

தூரங்களை...

நகர்ந்து செல்லும் கோட்டிற்கு இணையாய் இன்னொன்று... சேரும் புள்ளி நீண்டுக் கொண்டேயிருக்கிறது.... காத்திருப்பு களவாடிய நிமிடங்கள் என்னை என்னிலிருந்து பிரித்து சருகுகளின் சத்தங்களின் மேல் முளைத்த அடர்ந்துயர்ந்த மரங்களின் வழியே இட்டுச் சென்று அம்புலியின் வாசம் மறுத்த மண்ணை என்னுள் சுவாசமாக்கிவிடுகிறது... தூரங்களை அருகாக்கிவிட்டு என் கை உதறிச் செல்கிறது....

மண்ணுடன் மட்டுமே...

அரையில்  சிறு ஆடையுடன், சாலையில் மண்ணின் சிவப்புடன் யுத்தம் செய்துக் கொண்டிருந்தான்...  வியர்த்திருந்த ஆகிருதியில்       ஆணின் வாசனை... நுகரும் தென்றலுக்கு  புயலாகும் அமைப்பு... கைகளில்லா காமம் நீட்டி  பருகிச் சென்ற பெண்மையை   தின்றுக் கொண்டிருந்தான்... கடக்கும் கண்களை  பெருமூச்சை காற்றாக்கி   பகலில் கனவு சுமக்கச் செய்தான்...      புற்களையும் கற்களையும்  வருடிவிட்டு செல்லும் நதியாய்  நனைத்து, பின்  நீங்கி நின்றான்... இன்னும்  ஏதுமறியாதவனாக   மண்ணுடன் மட்டுமே  யுத்தம் செய்துக் கொண்டிருந்தான்...

இரவு கடந்து...

வாடித்தான் போய்விட்டன வாழ்த்திய பூக்கள்... வெள்ளையில் புள்ளிகள் சுமந்தும் மஞ்சளும் சிவப்புமாய் மலர்ந்து   முந்திய நாளில்  அலங்கரித்த பூங்கொத்தின்  முகம் மாற்றி, உதிரும் தருணங்களை நோக்கியபடி    வாடித்தான் போய்விட்டன வாழ்த்தியவை... வாடித்தான் போய்விட்டன வாழ்த்தியவை... என் அறை அடைத்து நின்றன அவை விட்டுச் சென்ற வாசத்தின் சுவடுகள்... இரவு கடந்து அவையும் காணாமல் போகும் என்னுள் கனவாகிவிட்ட    உன் நினைவுகளைப் போல....