டைரக்டர்.... கௌதம் வாசுதேவ் மேனன் என்கிற பெயர் பலகை தாங்கி வெளிவந்திருக்கிற படம். இவரைவிட இளையராஜா என்கிற கிராமத்து கலைஞனின் இசைத்தட்டை சுமந்து வந்த படம் என்பதை சொல்வது பொருத்தம். படம் பார்த்த பிறகு எனக்கு என்ன தோ ணு ச்சுன்னா இசை வெளியீட்டு விழாவோடே 'இத்துடன் இந்த படம் முடிந்தது' என்று சரோஜ் நாராயணசாமியை வைத்து ஒரு end card போட்டிருக்கலாமோன்னு.... இந்த படத்துக்கு இவ்வளவு பெரிய hype யை ஏற்படுத்தி நம்மை இப்படி ஏமாற்றியிருக்க வேண்டாம். எப்போ ஹீரோ ஸ்கூல் படிக்கிறாரு...எப்போ காலேஜ் படிக்கிறாரு...எப்போ IIM ல PG பண்றாரு...ஒண்ணுமே புரியல... கௌதம் முதல்ல உங்க காலேஜ் லைப்பை பிட் பிட்டா படம் எடுக்கிறதை நிப்பாட்டுங்க. எங்களுக்கு ரொம்ப போர் அடிக்குது. வேற கதை பண்ணுங்க கௌதம்...நீங்க படிச்ச காலத்தை விட்டு வெளியே வந்த பிறகு சொல்லி அனுப்புங்க. நாங்க படம் பார்க்க வரோம்... ஹீரோ.... ஜீவா ஸ்கூல் படிக்கும் போது பெரிய பாடி பில்டர் மாதிரி உடல், matured முகம், காலேஜ் படிக்கும் போது ஸ்கூல் பையன் மாதிரி முடியை க்ளோஸ் கட்....நல்ல வேளை IIM படிக்கும் போது காட்டலை.