Skip to main content

Posts

Showing posts from May 8, 2016

மனசாட்சி..

ஒரு  காலை வேளையில், மழையின் காரணமாய் வெளியில் வாக்கிங் போகமுடியாமல் மாடியில் நடந்துக் கொண்டிருந்தேன். சின்ன கார் ஒன்று வந்து எங்கள் ரோட்டில் நின்றது. அதிலிருந்து இறங்கிய மனிதர் கையில், ஒரு சிவப்பு பிளாஸ்டிக் டப்பா இருந்தது. அவரைப் பார்த்ததும் எங்க தெருவில் திரிந்துக் கொண்டிருக்கும் வால் மொட்டையான பிரவுன் கலர் நாய் ஓடிவந்தது. உடனே இவர் அந்த டப்பாவைத் திறந்து ஏதோ ஒரு மஞ்சள் நிற சாப்பாடை சாலையில் கொட்டினார். அதுவும் சாப்பிடத் தொடங்கியது. எனக்கு, என்னடா இது, எங்கிருந்தோ வந்து நம்ம ரோட்டில் சாப்பாடை கொட்டுறாறே என்று தோன்றியது. காருக்குள் ஏறி உட்கார்ந்துவிட்டார். சரி கிளம்பிவிடுவார் என்று பார்த்தால், எதையோ உள்ளிருந்து விரட்டிக் கொண்டிருந்தார். பட்டேன்று கதவு திறந்து இறங்கி கீழே இருந்து ஒரு கல்லை எடுத்து வீசி விரட்டிக் கொண்டிருந்தார். என்னவென்று பார்த்தால் அங்கே இன்னொரு தெரு நாய். அதுவும் இவரை நெருங்க, இவர் அதை விரட்ட, இந்த நாய் சாப்பிட்டு முடிக்கும் வரை இப்படியே காவல் காத்துவிட்டு அப்புறம் காரை கிளப்பிக்கொண்டு போனார். எல்லாமே தெருவில் உள்ள நாய்கள்தான். இந்த நாயின் மீது மட்டும் அவரு

வீட்டுக்கு பெயரிட்டாச்சு..

இனி செங்கல் சுடவேண்டும் அறைகளும் நடுமுற்றமும் அதில் சமைக்க வேண்டும் தாழ்வாரம் இறக்கவேண்டும் - அதனுள் திண்ணையொன்றும் கட்டவேண்டும் கதவுகளுக்கும் சன்னல்களுக்கும் தாழ் கோர்த்திடவேண்டும் கணக்கிட்டவாறே கட்டி வீட்டுக்கு பெயரும் இட்டாச்சு அழைப்பிதழில் சமையல்காரரின் பெயரும் சேர்த்தாச்சு மனிதர்கள் மகிழ்வாய் வந்தார்கள் இழுத்து இழுத்து பார்த்தாலும் முரண்டிட்டு நிற்கிறது வாயிலில், வீட்டு பசு சிலாகித்து மாந்தர்கள் பேசிக்கொண்டார்கள் ஏதோ குறையென்று பெரியவள் ஓடிப்போனாள் பழைய வீட்டை பார்த்து வாசல் தட்டி மறைத்திருந்த மல்லிகை பந்தலை பிடுங்கிவந்தாள் ஆழ குழியிட்டு நட்டு முன் வாசலில் படரவிட்டு திரும்பினால், பசு தலையசைத்தது இனி பூக்களோடு மனிதர்களும் வசிக்கலாம்.