Skip to main content

Posts

Showing posts from March 24, 2013

கண்ணாடி சில்லுகள்...

நிழல் தேடும் பாதையெங்கும் சிதறி கிடக்கும் இந்த வெளிச்ச துண்டுகள்  எதற்கும் உபயோகமில்லாமல்.. மரங்களின் இலைகளை தின்று   வட்டமாய், சதுரமாய் நீளமாய்  வேண்டும் உயிர் பெற்று உடைந்து போன கற்பரப்பின் மீது வெளிச்சங்களாய் நிழல் வெறுக்கும் கண்ணாடி சில்லுகளாய் நடக்கும் வழி மறித்து  எதற்கும் உபயோகமில்லாமல்....

கடந்து.....

சல்லடையாய் போயிருந்த அந்த மேகம் வசிகரிக்கும்படி இருந்தது.... வானத்தை இப்புறமும் அப்புறமுமாய் காட்டியது... மழை விடுத்த வெண்மையாய் கண்முன்னே காற்றாடியது... பயணித்துக் கொண்டேயிருந்தது நிற்கச் சொல்ல மனமுமில்லை... சொன்னால் நின்றிருக்கும் என்பதிலும் விருப்பமில்லை... பதித்த பார்வையின் ஓரமாய் சமுத்திரம் கடந்து வேகமாய் எங்கோ சென்றது....  

என் வெண்புறாவே...

இந்த வசிப்பிடம் உறுதி உனக்கு இவ்விடம் எனக்கு நிரந்தரமில்லை நான் புலம்பெயரும் நாள் நெருங்குகிறது... இத்தனை நாட்களாய் என் சிநேகிதத்தில் நீயும் உன் துணையும்... என் வீட்டின் உத்திரம் உனக்கு என்றபோது நான் உன்னை எதிர்த்ததில்லை... என் கவிதைகளை உன்னை சுற்றி பிணைத்து  உன்னை தமிழ் சுவாசிக்க வைத்திருக்கிறேன்...   நான் சொல்லி சென்ற கதைகளை கம்பியில் அமர்ந்து பொறுமையாய் கழுத்து சாய்த்து கேட்டிருக்கிறாய்... உறவின் உன்னதத்தை அறிந்தவன் நீ...    காலை வேளைகளில் நீ படபடத்து பறப்பதை பார்த்திருக்கிறேன்... மாலை வேளைகளில்     உன் ஊடலையும் காதலையும்   ரசித்திருக்கிறேன்... இருவரும் ஜோடியாய் சுற்றிவிட்டு வந்து இருட்டில் அடங்குவதும் சில நேரங்களில் சத்தத்துடன் சண்டையிட்டு ஆளுக்கொரு திசையில் அமர்ந்திருப்பதும்    தெரியும் எனக்கு.... முற்றத்து விளக்குமாரின் குச்சிகளை உருவி உன் கூட்டின் கூரையாக்கி இருக்கிறாய்... உன் குஞ்சுகளின் கரைச்சல் கேட்கும்வரை இ

வயலட் பூக்கள்...

வசந்தகாலத்தின் வண்ணத்தை குழைத்து   விழித்திருந்த என் கனவை காதலாக்கி இதயத்தை பஞ்ச ணை யாக்கி ஒளிகீற்று பட்டு மோகனமாய் மலர்ந்து மழைத்துளிகளை உன் இதழ் சுமந்து ஆனந்த இசையின் முகடு தொட்டு    இதழ் பிரித்து நீ சிரித்தபோது மனதின் வியாபங்களில் வயலட் பூக்களின் வாசம்...