Skip to main content

Posts

Showing posts from July 30, 2017

பிக் பாஸ் - சிக்கல்கள்

பிக் பாஸ் ~ அகிலா. . எழுதிவைத்து நடத்தப்படுகிறதோ எழுதாமலே நடத்தப்படுகிறதோ, எதுவாகினும் மனித உறவுகளை வைத்து பின்னப்படும் நிகழ்வுகள் அரங்கேற்றப்படுகின்றன பிக் பாஸில். நிஜத்தில், இம்மாதிரி நடந்தேற நாட்கள் பிடிக்கலாம். இன்னும் பல சூழல் சிக்கல்கள் இடைபுகலாம். அதிகமான மனிதர்கள் உட்புகலாம். அதுமாதிரி அல்லாமல், குறிப்பிட்ட சூழலுக்குள், எண்ணிக்கையில் சிறியதான நபர்களிடையே நடைபெறுவதால், அவரவர் இயல்புகளுடன் கலந்து, அதனுடன் எழுதி இயற்றப்பட்டவையும் சேர்ந்து சீக்கிரம் அரங்கேறுகின்றன. பொழுதுபோக்குக்கான சிறப்பாய் தெரிகின்றன. சீரியல் என்னும் நெடுந்தொடரை விட இது சட்சட்டென்று, முடிவுகள் முகமாற்றங்களுடன் வெளிபடுவதால், மக்கள் அதை பார்ப்பதை விடுத்து, இதற்கு முன்னுரிமை கொடுக்கத் தொடங்கிவிட்டனர். இதுவும் ஒருவகையில் நல்லதே. யாரை எப்படி விஷம் வைத்து கொல்வது என்று பத்து நாட்களாய் திட்டமிடுதல் குறைக்கப்படுகிறது. இதிலிருக்கும் கதாபாத்திரங்கள் தங்களை மற்றும் தங்களைப் போன்றோரை ஒத்திருப்பதால் சுலபமாய் அந்த வீட்டிற்குள் இவர்களாலும் அவர்களுடன் வாழமுடிகிறது. தாங்கள் திரையில் பெரிதாய் உருவகப்படுத்தி பார்த்த

81வது கோவை இலக்கிய சந்திப்பு

81வது கோவை இலக்கிய சந்திப்பு கோவை இலக்கிய சந்திப்பின் 81வது நிகழ்வு, நேற்றைய (30.7.17) காலை கொடிசியாவில் கோவை புத்தகக் கண்காட்சி, இலக்கிய கூடல் அரங்கில் இனிதே நடந்தது. நூல் வெளியீடு  'கனவு' சுப்ரபாரதி மணியன் அவர்களின் 'The Hunt', 'The Lower Shadow' என்ற இரண்டு ஆங்கில நூல்கள் வெளியீடு நடைபெற்றது. பொன் இளவேனில்  அகிலா  மறைந்த கவிஞர் சுகந்தி சுப்பிரமணியன் அவர்களின் படைப்புகள் குறித்த அறிமுகம் என்னால் செய்யப்பட்டது. அவரின் கவிதைகள் குறித்து பொன் இளவேனில் அவர்கள் உரையாற்றினார். தாரணி  ப்ரிதிவிராஜ்  சுப்ரபாரதி மணியன் அவர்களின் ஆங்கில நூல்கள் குறித்து, பேராசிரியர் தாரணியும், கேர் அறக்கட்டளையின் ப்ரிதிவிராஜ் அவர்களும் உரையாற்றினார்கள். அவைநாயகன்  புன்னகை ரமேஷ்குமார்  புன்னகை ரமேஷ்குமார் அவர்களின் 'யாவர் மீதும் முளைத்திருக்கும் தாவரங்கள்' என்னும் கவிதை நூல் குறித்து அவைநாயகன் அவர்கள் உரையாற்றினார்கள். சோலைமாயவனின் 'வழியும் குரலற்றவனின் செங்குருதி' கவிதை நூல் குறித்து இளஞ

அமரர் கல்கி நினைவுச் சிறுகதை போட்டி 2017 முடிவுகள் - இரண்டாம் பரிசு

அமரர் கல்கி நினைவுச் சிறுகதை போட்டி முடிவுகள் - 2017 அமரர் கல்கி நினைவுச் சிறுகதை போட்டி 2017 முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. 6 ஆகஸ்ட் 2017 இதழில். அதில் இரண்டாம் பரிசாய் என் சிறுகதை தேர்வாகி உள்ளது.  அதற்கு சிறுகதை எழுதி சேர்ப்பித்திருந்தவர்களில் நானும் உண்டு.  நேற்று அதன் முடிவுகள் வெளியாக, அதில் எனக்கு இரண்டாம் பரிசு கிடைத்திருப்பதை அறிந்து மிகுந்த மகிழ்ச்சி.  முதல் பரிசு : துளசி என்னும் புனைப்பெயரில் எழுதும் லோகநாதன் எழுதிய 'அகலிகை' என்னும் சிறுகதைக்கு. அந்த கதை இந்த இதழிலேயே வந்திருக்கிறது. அருமை. இரண்டாவது பரிசு : அகிலா (நான்தான்) எழுதிய 'வலசை' என்னும் சிறுகதைக்கு. இது அடுத்த வாரம் வெளியாகிறது.  மூன்றாவது பரிசு : கனகராஜ் எழுதிய 'கடன்' என்னும் சிறுகதைக்கு.  வாழ்த்துகள் மற்றவர்களுக்கும்.