Skip to main content

Posts

Showing posts from June 2, 2013

அணில்....

பரந்து விரிந்திருந்த அந்த பெரிய மரத்தின் சிறு கிளையொன்றில் ஓர் அணில் பிள்ளையால் உண்டாகும் சலசலப்பு நகர்ந்துக் கொண்டேயிருக்கிறது...   அசைவுகள் அதன் சிறு கிளைகளிலும் இலைகளிலும் பயணிக்கிறது தொடர்வண்டியாய்....  அவை உள் நோக்கி பயணிக்கையில்   கிளைகள் தவிர்த்து இலைகளில் மட்டுமே சலசலப்பு... பக்கவாட்டில் என்றாகும் போது   சிறு கொம்புகளின் ஆட்டங்கள் கூட அதிகமாகவே... புரிதலின் பயணங்களும் அப்படிதான்... மனம் நோக்கிய பயணத்தில்   கோபங்களும் ஆர்ப்பரிப்புகளும் அடங்கி புரிதல் சாத்தியப்படுகிறது.... மனம் விடுத்த பயணத்தில் சலசலப்புகள் உரசல்களாகி புரிதல் புறக்கணிக்கப்படுகிறது.... எங்காயினும் புரிதல்கள் பயணங்களை சார்ந்தே அமைந்துவிடுகிறது...