நம் அம்மா காலத்தில் சூப்பர் மார்க்கெட், டிபார்ட்மென்ட் ஸ்டோர் எல்லாம் கிடையாது. அண்ணாச்சி கடையில் லிஸ்ட் கொடுத்தால் சாமானெல்லாம் வீடு தேடி வரும். நாமெல்லாம் சூப்பர் மார்க்கெட் தேடி போய் வாங்கினாலும் தேவையற்றதை வாங்காமல் இருந்தோம். ஆனால் இப்போதைய இளம் தாய்மார்களின் நிலையே வேறு. கண்ணில் பட்டதை எல்லாம் வீட்டுக்கு வாங்கி வந்துவிடுகிறார்கள். ஆனால் குழந்தைகள் ஓன்று கேட்டால் மறுக்கும் குணம் எங்கிருந்து வருகிறது என்பது மட்டும் புரியவில்லை. அந்த ஒரு விஷயத்தில் மட்டும் ஓல்ட் மாடல் ஆகவே இருக்காங்க. நேற்று நீல்கிரிஸ் டிபார்ட்மென்ட் ஸ்டோருக்கு சென்றிருந்தேன். அங்கு ஒரு பெண்குழந்தை அவளின் அம்மாவுடனும் தாத்தாவுடனும் வந்திருந்தாள். ஐந்து வயதிருக்கும் அந்த சுட்டிக்கு. பார்க்கும் சாக்லேட் எல்லாம் எடுத்துக் கொண்டிருந்தது. அவளின் அம்மாவோ எடுக்காதேன்னு சொல்லி சொல்லி சலிச்சே போயிட்டா. கடைசியில் ஒரு குழந்தைக்கு ஒரு சாக்லேட் தான் எடுக்கணுமாம் இந்த கடையில் என்றாள். அவ்வளவுதான். அதன் முகமே மாறிவிட்டது. ஒன்றை எடுப்பதும் இன்னொன்றை பார்த்துவிட்டால் அதை வைத்துவிட்டு அடுத்ததை எட