Skip to main content

Posts

Showing posts from July 27, 2014

தேவந்தி - நூல் மதிப்புரை

தேவந்தி நூல் : தேவந்தி ஆசிரியர் : எம் ஏ சுசீலா 27/7/2014 அன்று நடந்த கோவை இலக்கிய சந்திப்பில் நான் ஆற்றிய மதிப்புரை சுசீலாம்மாவின் தேவந்தி என்னும் இந்த நூல் 1979 – 2009 வரைக்கும் அவர்கள் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு. இது ஒரு வடக்கு வாசல் பதிப்பக வெளியீடு. எம் ஏ சுசீலா கல்விப் பணியில் தமிழ்த்துறை பேராசிரியராக 36 வருடங்கள் பணியாற்றியவர் மதுரை பாத்திமா கல்லூரியில். இடையில் இரண்டு வருடங்கள் அதே கல்லூரியில் துணை முதல்வராகவும் இருந்திருக்கிறார். அதனால் இவரின் இந்த தொகுப்பில் கல்வித்துறை சம்பந்தப்பட்ட கதைகள் நிறைய காணமுடிந்தது.   ஆரம்ப காலம் தொட்டே இலக்கியத்திற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். சிறுகதை, கட்டுரை, நூல் மதிப்புரை ஆய்வு, மொழியாக்கம் என்று பல தளங்களில் இயங்கி வருபவர். தற்பொழுது ஒரு நாவலும் பிரசுரத்தில் இருக்கிறது. இந்த தொகுப்பில் மொத்தம் 36 சிறுகதைகள் அடங்கியுள்ளன. பெரும்பாலானவை பெண்களின் வாழ்வியல் பிரச்சனைகளை எடுத்துரைக்கிறது. படிக்க படிக்கவே நம் தினசரி வாழ்க்கை கண் முன் விரிகிறது. எழுந்த நேரத்தில் இருந்து படுக்கும் நேரம் வரை நமக்குள் நடக்க

வறண்ட பாதங்கள் மட்டும்

முழ்கியெழுந்த பாதச்சுவடுகள் கரை தழுவி நடக்கையில் யாக்கையின் நிர்வாணம் நிலவின் முன் நிர்ச்சலனமாய் விரிய, வனாந்தரத்தில் சருகுகள் கருகத் தொடங்கியிருந்தன விசும்பலின் ஒலி இப்போது சுவடுகளிடமிருந்து அதில் மீந்த துளிகள் மீன்களின் வசிப்பிடமாகின.. வறண்ட பாதங்கள் மட்டும் வனப்பின் வடிவம் தாங்கியபடி நடந்துக் கொண்டிருந்தன..