வகை (3) பெண்கள் முன்னேற்றம் குறித்த கட்டுரைகள் பெண்ணீயமும் பெண் சுதந்திரமும் பெண்ணீயம் : பெண்ணீயம் என்பது குடும்பம், சமூகம், பொருளாதாரம் என்ற அனைத்து தளங்களிலும் பெண்களுக்கான உரிமைகளை வழங்கப் பாடுபடுவது. பெண்களின் முன்னேற்றத்திற்கு மிக முக்கியமான அடிப்படை வாதங்களில் ஓன்றுமாகும். சமூக விழிப்புணர்வும் பெண் சார்ந்த நிலைப்பாடுகளும் சரியான புரிதலில் ஆண், பெண் இருவருக்குமே இருந்தால், பெண் முன்னேற்றம் என்பது எளிதாய் சாத்தியமே. இப்போது இருக்கும் சமூகத்தில், பெண்ணீயம் என்பதை தவறாக புரிந்துக் கொள்ளும் நிலைதான் இருக்கிறது. சமூகத்தில் பெண்ணின் உரிமைகளை எடுத்துரைக்கவும் தந்தைவழி சமூகத்தின் அடிமைத்தனத்தை ஒழிப்பதும்தான் அதன் அடையாளம்.. ஆணை வெறுப்பது அல்ல அதன் நோக்கம். என் கணவர் சினிமாவுக்கு தனியாகவோ, நண்பர்களுடனோ போக அனுமதிக்கவில்லை என்று ஒரு குற்றச்சாட்டை ஒரு பெண்மணி என்னிடம் வைத்தார். இதை ஆணாதிக்கம் என்று என்னிடம் இரைந்து கத்தினார். அது தவறு என்கிறது பெண்ணீயம். சினிமாவிற்கு போவதற்கு பெண்ணீயம் தேவையில்லை. சின்ன சின்ன ஒன்றுமில்லாத விஷயங்களுக்கு எல்லாம் அதை இழுக்கவே